பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/764

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o, H "To 771. உப்பு விற்றுப் பெற்ற மூரல் வெண் சோறும் அயிலை இட்டாக்கிய புளிக்கறியும் சொரிந்து கருவாட்டுடன் இளைய மகள் இடும் இடம் திண்ணிய தேரினை உடைய சேரனது தொண்டி. குட்டுவனது தெளிந்த அலைகள் பொருந்திய பரப்பினை உடைய பட்டினம் (துறைமுகம்) தொண்டி என்கின்றார் நக்கீரர். தொண்டித் துறையில் வண்டுகள் ஆரவாரித்திட நாடுதற்கு மலர்ந்துள்ளன. தண்ணில் நெய்தற் பூக்கள். அகன்ற வயலின்கண்ணே. மன்னரால் அறியப்பட்டும், அரிச்சுட்டை எடுப்போரால் கொண்டு வரப்பட்டும், தண்ணிய சேறு பரந்து அழகிய வலிய தண்டினையுடைய கண்போன்ற நெய்தல் நெற் போரினிடத்து மலருந் திண்ணிய தேரையுடைய பொறை யனது தொண்டி எனப்படுகின்றது.39 சேரன் கணைக்கால் இரும்பொறைக்கு உரிமையுடையது தொண்டி. அந்நகரின் தலைவனாகிய அவன், வேள் என்பவனைப் போரில் வென்று அவனது முள்போன்ற பற்களைப் பிடுங்கிக் கொண்டுவந்து கடற்கரைச் சோலைகள் நிரம்பிய தொண்டி நகரின் வாயிற் கதவிலே வைத்திழைத்தான் என்று. குறிக்கப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட உழவர் நெற்கதிர். அரிந்திடும் வயல் வளமிக்க தன்மையும், கல்லென்று. ஒலிக்கின்ற புள்ளினங்களை உடைய கடற்கரைச். சோலைகள் சூழ்ந்த பாங்கும் தொண்டிக்குரியன என்று. நற்றிணைப் பாடல் ஒன்று: சொல்லுகின்றது. --- சேரனுட்ைய தொண்டி மேற்குக்கடற்கரையில் அமைந்' துள்ளது. அத்துறையின்கண் அயிரைமீன் மிகுதியும் கிடைக்கும் என்கிறார் பரணர். பச்சை அவலை இடித்த 8. அகம் : 60:1-7. - - - -- - - “... 9. அகம் : 290 : 12-14. 10. நற்றிணை ; 8 : 5.9. 1 1. ,, 18 : 2-4. . . . . 12. 5 J 195 : 5-6. . . . . 13. குறுந் ; 128 : 2.3. . . . . . .