பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/765

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

774 கோனாட்டுக் கழுமலமாகிய சீகாழியின் இது வேறு என்பர்.24 - - - 4. குழுமூர்: இது உதியன் என்னும் சேர மன்ன னுடைய ஆட்சியில் இருந்த ஊர். நல்ல ஆநிரையின் மிகுதியைக் கொண்ட அவ்வூர் பல்லான்குன்று என்னும் மலைக்கு அருகில் இருந்திருக்கவேண்டும். அக்குழுமூரில் ஈகையைக் கடனாக ஏற்றுக்கொண்ட தூய நெஞ்சினன் ஆன உதியனுடைய அட்டில் எப்போதும் ஒசை நிரம்பிய தாய் இருக்கும். குழுமூரில் உள்ள அட்டிலைச் சிறப்பிக்கக் காரணம் என்ன? சேரவேந்தர் வறுமையுற்ற மக்களின் பசிப்பிணி நீக்க வேண்டி அறச்சாலைகள் நாடெங்கும் அமைத்துச் சோறு அளித்துவரும் சீரிய இயல்பினர் என்பது இன்னும் மலைநாட்டில் நிகழும் அறச் செயல்களால் அறியலாம். இத்தகைய அரிய செயலை மிகப் பழங்காலத் திலேயே சேரவேந்தர் மேற்கொண்டிருந்தனர் என்பது பாரதப்போரில் இருபெருஞ்சேனைக்கும் உணவளித்துதவிய பெருங்சோற்றுதியன் சேரலாதன் வரலாற்றால்28 அறிய லாம். - ᏝᎠ6ᏈᎠ6hᎠ கொல்லிமலை : குட்டுவன் சேரனுக்கு உரியது கொல்லி மலை. இந்த மலையில் உள்ள சுனையில் மணங்கமழும் குவளைமலர்கள் பூக்கும்.27 பாணர் பரிசிலாகப் பெற்ற நல்ல குதிரையின் குளம்புகள் பட்டுப்பட்டு மலை வழி செப்பமாகியது. அவ்வழியில் மெலியாமல் இரவலர் ஏறு. கின்ற பொறையனது கொல்லிமலை அமைந்துள்ளது. அம்மலையின்கண் தெய்வத்தால் படைக்கப்பட்ட அழகிய 24. மு. இராகவையங்கார் சேரவேந்தர் செய்யுட் கோவை, பக்கம் 364. 25. அகம்; 303:4.7, அகம்; 338 : 14, அகம்; 168: 4-7. 26. புறம். ■ - - 27. நற்றிணை: 105:7-9.