பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/766

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77s செயல்திறன் அமைந்த பாவை ஒன்று உள்ளது.”* பொறை யனது தண்ணென்று குளிர்ந்து விளங்கும் கொல்லிமலை யிடத்துள்ள சிறிய பச்சையான மலைப்பச்சை மணமுள்ள தாக விளங்குவதால் மகளிர் கூந்தலில் சூடி மகிழ்வர்."" என நற்றிணை குறிப்பிடுகின்றது. சேரனுடைய கொல்லி மலையின் மேற்குப்பக்கத்தில் அச்சந்தரும் கரிய கண்ணை யுடைய தெய்வத்தால் எழுதப்பட்ட நல்ல பாவை உள்ளது என்று அதே செய்தியைக் குறுந்தொகை குறிப்பிடு கின்றது.80 அந்தக் கொல்லி மலையின் மீது மூங்கில்கள் நிறைந்திருக்கின்றன; அது வல்வில் ஓரி என்பானுக்கு உரியது. முள்ளுர் மன்னனாகிய காரி என்பவன் அவ் ஓரியைக் கொன்று அவனுக்குரிய கொல்லிமலையைச் சேர வேந்தனுக்குக் கொடுத்தான். சிவந்த வேர்ப்பலா மரங்கள் செறிந்து கிடப்பது அம்மலை. தீப் போன்ற கதிரொளி விடும் அழகிய மணிகள் மிளிரும் கொல்லிம்லை." மேகம் மலையின் உச்சியிலிருந்து பாய்ந்துபரவிச் செல்லும் அருவி." அகன்ற கரிய காட்டினை உடையது;" கொல்லிமலை அக்காலத்தில் பெற்றிருந்த சீரும் சிறப்பும் பீடும் பெரு மிதமும், அதன் கண் விளங்கிய அழகுப்பாவையின் புகழும் புதுமையும் எங்கும் பரவியிருந்தன, எவரையும் ஈர்த் திருந்தன என்பதை அறியலாம். திருவிழா 1. சேரர் திருநாள்: கூத்தருடைய சுற்றம் சூழ்ந்திருந்து வாழ்த்தும் குளிர்ந்த கடல் சூழ்ந்த நாட்டின் தலைவனான 28. நற்; 185:3.11. 29. 346; 8-10. 30. குறுந் , 89:4-6. 31. அகம்; 62:13-15. 32. அகம்; 33; 14. 15. 33. அகம்; 209: 13-17. 34. அகம்; 213: 14-15.