பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/767

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

776 சேரனின் பிறந்தநாள் ஒலக்கத்திலே எல்லாக் கலையும் உண்ர்ந்த ரிேயோர் திரண்டு அவன் கேட்பத் தருக்கங் களைக் கூறி விரும்புதல் கொண்ட ஆரவாரத்தை ஒப்பப் பலாச்சுளைகளும், மாம்பழங்களும், பல்வகைக் காய்களும், பழங்களும், கற்கண்டுத் துண்டுகளும் இறைச்சிகளோடு சோறும் கிழங்குகளும் கொண்டுவந்து மக்களுக்குப் படைக் கவும் அவர்கள் ஆரவாரத்துடன் உண்பர்". சேரன் அவையில் தருக்கவாதம் அடிக்கடி நிகழும் என்று மணி மேகலை குறிப்பிடும். 38 நச்சினார்க்கினியர் சேரமன்னனின் பிறந்தநாள் எனக்கொள்ளாமல் பெரிய நாளொலக்கம் என்றே பொருள் கொண்டார் என்பது நோக்கத்தக்கது. 2. உள்ளிவிழா: நற்றிணையில் இருநூற்று முப்பத்து நான்காம் பாடல் விடுபட்டுப் போயிருக்கின்றது. பின்னத் துார் நாராயணசாமி ஐயர் அவர்கள் பதிப்பில் இப்பாடல் கிடைத்திருப்பதாகப் பின்னிணைப்பு எனச் சேர்க்கப்பட்டி ருக்கின்றது. அதில் வஞ்சிமாநகரைப் பற்றியும் அங்கு நடைபெறும் உள்ளிவிழாவினைப் பற்றியும் குறிக்கப்பட் டுள்ளன கொங்குநாட்டினர் மணியினை இடையில் கட்டிக்கொண்டு தெருவில் ஆடுவது உள்ளிவிழா. கழுமலம் என்னும் ஊரைப்பற்றியும் அவ்விடத்தே நிகழ்ந்த போரில் சோழன் வென்றமையும் அப்பாட்டில் உணர்த்தப்படு கின்றன.89 35. மதுரைக்காஞ்சி; 523.535. 36. 26: 63-4. 37. பத்துப்பாட்டு, 2. உ. வே. சா. பதிப்பு, பக்கம் 398 : வரிகள் 523.525. 38. நற்; 1956-ஆம் ஆண்டுப்பதிப்பு; இப்பாடல் இறை யனார் அகப்பொருள் 28 ஆம் நூற்பா உரையில் மேற்கோளாகக் காட்டப்பெறுகின்றது. 39. நற்: 234:7.9.