பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/768

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

777 சேரர்களின் நாடு, ஊர், மலை, விழாக்கள் பற்றிய செய்திகளை இலக்கியங்கள் ஆங்காங்கே குறிப்பிடுவன வற்றை இவ்வாறு ஒரளவு நாம் தொகுத்துக் காணலாம். VII சிலப்பதிகாரம்-பதிற்றுப்பத்து சிலப்பதிகாரத்திற்கும் பதிற்றுப்பத்திற்கும் உள்ள சில தொடர்புகளைக் காண்போம். ஐந்தாம் பத்திற் பாடப் பட்ட செங்குட்டுவன் மோகூர் மன்னனுடைய வேப்ப மரத்தை வெட்டினான் எனக் கூறப்படுகின்றான். இதுவே சிலப்பதிகாரத்திலும் நீர்ப்படைக்காதையின்கண் சொல்லப் பட்டிருக்கக் காண்கிறோம். பழையன் காக்கும் குழைபயில் நெடுங்கோட்டு வேம்புமுதல் தடிந்த ஏந்துவாள் வலத்துப் போந்தைக் கண்ணிப் பொறைய கேட்டருள்' என வரும் சிலப்பதிகார அடிகள் மோகூர் மன்னன் முரசங் கொண்டு நெடுமொழி பணித்தவன் வேம்புமுதல் தடிந்து" என்றும், மோகூர்...... ■ ■ ■ ■ 郵 ■ ■ ■ ■ ■■ 睡 கடுங்சின விறல்வேம்பு அறுத்த பெருஞ்சினக் குட்டுவற் கண்டனம் வரற்கே? என்றும் வரும் பதிற்றுப்பத்து அடிகளோடு ஒப்புநோக்கத் தக்கன. _ --- 1. காதை 27 : 124.126. 2. பதிற்றுப்பத்து V, 4 : 14-15, 3. 5 : Ꮩ ; 9 : 16- 17.