பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/769

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

778 செங்குட்டுவனுடைய முதாதையர் ஒருவர் அகப்பா என்ற ஊரை எறிந்தவர் என்ற செய்தி, - மிகப்பெருந் தானையோடு இருஞ்செரு வோட்டி அகப்பா எறிந்த அருந்திறல்' எனச் சிலப்பதிகாரத்துள் குறிக்கப்படுகின்றது. இதுவே பதிற்றுப்பத்துள் தண்ணலம் பெருங்கோட்டு அகப்பா எறிந்த பொன்புனை உழிஞை வெல்போர்க் குடவே" எனப் பாலைக் கெளதமனாரால் சொல்லப்படுகின்றது. செங்குட்டுவன் நெடுங்கடலோட்டிய செய்தி சிலப்பதி காரத்துள், நெடுந்தேர்த் தானையொடு இரும்பிற்புறத்து ா இறுத்துக் கொடும்போர் கடந்து நெடுங்கட லோட்டி" எனப்படுகின்றது. இச்செய்தி பதிற்றுப்பத்தில் கோடுநரல் பெளவம் கலங்க வேலிட்டு உடை திரைப் பரப்பின் படுகடல் ஒட்டி வெல்புகழ்க் குட்டுவன்' என வருவதோடு பொருந்துகின்றது. இவ்வாறு பதிற்றுப்பத்தில் குறிக்கப்படும் சில செய்திகள் சிலப்பதிகாரத்துள் பேசப்படுவனவோடு வரலாற்று முறை யில் முற்றிலும் பொருந்தி அமைகின்றன என்பதைக் காணலாம். 4. நடுகற்காதை : 143.14. 5. பதிற்றுப்பத்து. 111; 2 : 26-27. 6. காதை 28 : 118-119. * 7. பதிற்றுப்பத்து V; 6 - 11-13.