பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 of the later colas and the Palikams of Patirrupattu, as: explained by Thiru T. V. Sadasiva Pandarathar in his short introduction to the present commentary.” (Introduction to Prof. Avvai Duraiswamy Pillai's. commentary on Patirrupattu). மக்கட்டாயமே என்ற கருத்தே முடியானது தேவி என்ற சொல் மகள் என்ற பொருளிலும் வழங்கும் என்பதும், சிலப்பதிகார உரையாசிரியர் அரும் பதவுரைகாரர் இளங்கோ வேண்மாள்' - பெயர் என்று குறிப்பிட்டிருத்தலும், வேளாவிக் கோமான் பதுமன்றேவி' ான்ற தொகைநிலைத் தொடர், வேளாவிக் கோமான் மகளான பதுமன்றேவி என விரிந்து பொருள் தரும் என் பதும், இளங்கோவடிகள், குமரியொடு வடவிமயத் தொருமொழிவைத் துலகாண்ட சேரலாதற்குத் திகழொளி ஞாயிற்றுச் சோழன்மக ளின்ற மைந்தன் செங்குட்டுவன் உசிலம்பு; வாழ்த்துக்காதை உரைப்பாட்டுமடை : 1. என்று தம் நூலில் தம் தமையன் பிறப்பைத் தெளிவுபடக் கூறியிருப்பதும், செங்குட்டுவனுக்குச் சோழன் மைத்துன முறையினனாதலும், சேரன் மனைவியரே உடன் முடி கவித்தற்குரிய தேவியராதலும், சேரர் மனைவியர் அரசுக் குரிய புதல்வரையுடையராதலும், சேரரின் வேறொரு கிளை யினரான அதிகமான்களும் மக்கட்டாயிகளாகக் காணப் படுதலாலும், தொல்காப்பியம் மக்கட்டாய முறையையே கூறுவதனாலும், சேரர் சிலாசாசன வழக்கும் சேரர் தாய முறை மக்கட்டாயமே என்பதற்குச் சான்று பகர்வத னாலும் இன்ன பிறவற்றாலும் சேரர் மக்கட்டாயிகளே என்னும் கொள்கை வலியுறும்.