பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 புன்கா லுன்னத்துப் பகைவன் என்கோ ஈத்தது இரங்கான் ஈத்தொறு மகிழான் ஈத்தொறு மாவள் ளியன். -ஏழாம் பத்து; 1 : 1.5 & 12-13. பார்ப்பாரை யன்றிப் பிறரைப் பணிதல் இல்லை. உயிரொத்த நண்பர்க்கல்லது பிறருக்குக் கண்ணோடி அஞ்சுதலில்லை. சாந்துபூசி மணங்கமழும் மார்பு, உரிமை மகளிர்க்கு இன்பந் தருதற்கு விரித்துக் காட்டுவதன்றிப் பிற பகைவர்க்குக் காட்டுதலில்லை. நலி வகைகள் தம் இயல்பில் திரிந்து கெடுங்கால மெய்தினும் நின் வாயாற் சொல்லிய சொல் பொய்படுவதை நீ அறிவாய்." o இவ்வாறு செல்வக்கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாராட்டுவர். பார்ப்பார்க் கல்லது பணிபறி யலையே பணியா வுள்ளமொ டணிவரக் கெழீஇ நட்டோர்க் கல்லது கண்ணஞ் சலையே வணங்குசிலை பொருதநின் மணங்கம ழகலம் மகளிர்க் கல்லது மலர்ப்பறி யலையே நிலந்திறம் பெயருங் காலை யாயினும் கிளந்த சொன்னி பொய்ப்பறி யலையே. -ஏழாம் பத்து; 3 : 1-7. மேலும் அவன் பகைவரை வஞ்சியாது எதிர்பொருது வென்ற காஞ்சித் திணைக்கமைந்த வீரர்க்குத் தலைவன் என்றும், வில் வீரராகிய சான்றோர்க்கு மெய்புகு கருவி போன்றவன் என்றும். தன்னை அடைந்தோர்க்குச் செல்வமாகப் பயன்படுபவன் என்றும், செவ்விய அணி களை அணிந்த சேரமாதேவியின் கணவன் என்றும், பாண் குடும்பங்களைப் புரப்பவன் என்றும், பரிசிலர்க்குச் செல்வ மாய் இருப்பவன் என்றும், பூனாரமணிந்து விளங்கும் புகழ் நிறைந்த மார்பினன் என்றும் கபிலரால் மேலும் பாராட்டப்படுகின்றான்: