பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 மேலும் இரண்டு பதிற்றுப்பத்துப் பாடல்கள் வினை தவில் யானை' என்றும், தொழில்நவில் யானை' என்றும் பெயர் அமைந்திருக்கக் காண்கிறோம். இ வ. ற் றா லெல்லாம் சேரர் யானைப் படையின் செம்மை நலம் புலனாகக் காணலாம். யானை நெற்றியில் ஒடை எனப்படும் முகபடாம் அணிந்து வெற்றி வீறும் மருப்புடன் பொலிவதாகவும், யானையின் எருத்தத்தில் மன்னன் மாண்புடன் வீறார்ந்த கோலம் கொண்டு வீற்றிருப்பதாகவும் புலவர் ஒருவர் பாடு கின்றார். போரில் வல்ல யானை என்றும், மதம் பெருக்கும் யானை என்றும், காண்பதற்கு அச்சத்தை விளைவிக்கும் யானை என்றும் யானை கூறப்படுகின்றது. மேலும் உரல் போன்ற கால்களையும், வெண்மையான கொம்புகளையும், நீண்ட துதிக்கையினையும் கொண்ட தாகவும் உள்ள ஆண்யானையைக் காட்டி யானை வேட்டுவர் புதிதாகப் பெண் யானைகளைப் பிடிப்பதாகவும் கூறப்படுகிறது. கட்டுத்தறியோடு பிணிப்புண்டற்கு இடந்தராது, குத்துக்கோல் பலவற்றையும் சிதைத்து, உயர்ந்து பறக்கும் பருந்தினது நிலத்திடத்தே வீழும் நிழலைச் சினந்து பாயும் யானைகள் என்று அரிசில் கிழார் குறிப்பிடுவர். மேலும் கொங்கர்களுடைய பசுக்கள் பரந்து செல்வது போன்று கணக்கற்ற யானைகள் தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும் பொறையின் சேனையில் மிகுந்திருந்ததாகப் புலவர் குறிப்பிடுவர். கந்துகோ ளியாது காழ்பல முருக்கி உகக்கும் பருந்தி னிலத்துகிழல் சாடிச் சேண்பரன் முரம்பி நீர்ம்படைக் கொங்கர் ஆபரந் தன்ன பல்செலவிற் யானைகாண் பலவன் றானை யானே. -எட்டாம் பத்து; 7 : 8-12.