பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்தினிக்கடவுளைப் பிரதிஷ்டித்தல்.

87

வன் பெரிதும் அதிசயமடைந்தான். அப்போது அவ்வரசனுக்குக் கண்ணகி, தன் கடவுணல்லணி காட்டியதோடு, தன் னைக் காணவந்த மகளிரை நோக்கித் ‘தோழிகாள்! தென்னவனாகிய பாண்டியன் சிறிதுங் குற்றமுடையவனல்லன். அவன் தேவேந்திரன் சபையில் நல்விருந்தாய் விளங்குகின்றான். நான் அவ்வரசன் மகள் என்றறியுங்கள். முருகன் வரைப்பாகிய இம்மலையில் விளையாடல் புரிய எனக்குப் பெருவிருப்பமாதலால் இவ்விடத்தைவிட்டு யான் நீங்கேன். என்னோடு என் தோழிகளாகிய நீவிரும் சேர்ந்து விளையாட வருதிர்’ என்று தன் பழமை கொண்டாடி அப்பத்தினி கூறினள். இங்ஙனம் பத்தினித்தெய்வம் நேர்நின்று கூற அவற்றைக் கேட்டிருந்தவராகிய வஞ்சிமகளிரும் செங்குட்டுவன் ஆயமகளிரும் வியப்புற்றுத் தங்களிற்கூடி, அத்தெய்வத்தையும் அத்தெய்வஞ் சஞ்சரித்த தமிழ் நாடாளும் அரசர் மூவரையும் அம்மானை கந்துகம் ஊசல்வரிகளாலும் உலக்கைப்பாட்டாலும் பலவாறு வாழ்த்திக்கொண்டு பாடினர். முடிவில் ‘சேரன் - செங்குட்டுவன் நீடூழி வாழ்க’ என்று அத்தெய்வவுருவமும் அரசனை வாழ்த்தி மறைந்தது.


7-வது வரந்தருகாதை.
பத்தினி, செங்குட்டுவனையும் பிறரையும் அநுக்கிரகித்தது.


வடதிசையை வென்றுவணக்கிய சேரலர் பெருமானான செங்குட்டுவன், பத்தினிக்கட்வுளது தெய்வவுருவை மேற்கூறியவாறு தரிசித்தபின்னர், தேவந்தியென்னும் பார்ப்பனியை நோக்கிச் சிறிதுமுன்னர் நீங்கள் அழுதரற்றிக்கொண்டு பத்தினி முன்பு கூறிய மணிமேகலையென்பவள் யார்? அவள்