பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பத்தினிக்கடவுளைப் பிரதிஷ்டித்தல்.

91

திற்குவரும்படி இவளுக்குக் கட்டளையிட்டு மறைந்தனன். மறைந்தவன், நான் மங்கலாதேவியின் கோட்டத்திலிருக்கும் போது, அந்தணனுருக்கொண்டு வந்து தோன்றி, உறியில் மைந்த இக்கரகத்தை என்கைக்கொடுத்து நிகழ்வது கூறி, இதனைச் சேமமாக வைத்திருக்கும்படி எனக்குக் கூறிச்சென்றான். அங்ஙனஞ் சென்றது முதல் இதுவரை அவன் திரும்ப என்பால் வந்திலன் ; அதனால் இக்கரகத்தைத் தவறவிடாது என்னுடன் கொண்டுவந்தேன். இவ்வாறாதலால், அச்சாத்தனென்னுந் தெய்வமே தன் பார்ப்பனியாகிய இத்தேவந்தியின்மேல் இப்போது ஆவேசித்து இக்கமண்டல நீரைத் தெளிக்கும்படி கூறினான். வேந்தர்வேந்தே! இங்குள்ள இச்சிறுமியர்மேல் இதனீரைத் தெளித்துச் சாத்தன்கூறிய அவ்வுண்மைகளை நாம் இனியறிவோம்” என்று அம் மாடல மறையோன் நிகழ்ந்த வரலாறுகளைக் கூறித் தான் கொணர்ந்த கமண்டலத்து நீரை, அங்கிருந்த பெண்கள் மூவர் மேலும் புரோக்ஷித்தனன். உடனே, அச்சிறுமிகட்குத் தங்கள் பழம் பிறப்புணர்ச்சி வந்தடையவும், அம்மூவருந் தனித்தனியாக அடியில் வருமாறு புலம்பலானார்கள் :—

(முதலாமவள்) “யான் பெற்ற மகளே ! யாவரும் புகழத் தக்க உன்கணவன் கூடாவொழுக்கத்தனாய் உன்னை இகழ்ந்துநின்ற நிலைமைக்கு வருந்திநின்ற உன்தாயாகிய யானும் அறியாமலே அந்நியநாடு சென்று, உற்றாரொருவரும் இல்லாதவிடத்தில் தன்னந்தனியையாய்க் கணவனுடன் கடுந் துயரடைந்தனையே” (என்றாற்றினள்).

(இரண்டாமவள்) “என்னுடன் கூடவேயிருந்துவந்த உன்மனைவியும் என்மருகியுமாகிய கண்ணகியை அழைத்துக்-