பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

சேரன்-செங்குட்டுவன்

மேற்கூறியவாறு, கண்ணகியின் பொருட்டு இமயத்திற் கல்லெடுக்கச்சென்ற செங்குட்டுவன், வடநாடு சென்று தன் பகைவரைப் போரில் வென்று கல்லெடுப்பித்து, அதனைக் கங்கை நீராட்டி இரண்டேமுக்கால் வருஷங்கட்குப்பின் தன்னூர் புகுந்து பத்தினியைப் பிரதிஷ்டை செய்த வரலாறுகளைச் செங்குட்டுவன் சகோதரராகிய இளங்கோவடிகளே இனிமையும் கம்பீரமுமான தம்வாக்காற் பாடி, அப்பத்தினிக்கடவுள் தம்மை நோக்கிக் கூறிய வாக்கியங்களோடும் நூலைமுடித்திருத்தல் அறியத்தக்கது. இப்பத்தினியின் பிரதிஷ்டாகாலத்தில் வந்திருந்த வேற்று நாட்டரசர் சிலரும் சோழபாண்டியரும், செங்குட்டுவன் செய்தவாறே, கண்ணகிக்குத் தத்தம் நகரங்களில் கோயிலெடுத்துத் திருவிழா நடத்தியது முதலிய செய்திகளை அவ்வடிகள் சிலப்பதிகார முகப்பில் உரைபெறு கட்டுரை என்னும் பகுதியிற் கூறியிருக்கின்றனர் ; அது வருமாறு:—

(1) “அன்றுதொட்டுப் பாண்டியநாடு மழைவறங் கூர்ந்து வறுமையெய்தி வெப்புநோயுங் குருவுந்தொடரக் கொற்கையிலிருந்த வெற்றிவேற்செழியன் நங்கைக்குப் பொற்கொல்லராயிரவரைக் கொன்று களவேள்வியால் விழவொடு சாந்தி செய்ய நாடுமலிய மழைபெய்து நோயுந் துன்பமும் நீங்கியது.

(2) “அதுகேட்டுக் கொங்கிளங்கோசர் தங்கணாட்ட கத்து நங்கைக்கு விழவொடு சாந்தி செய்ய மழைதொழிலென்றும் மாறாதாயிற்று.

(3) “அதுகேட்டுக் கடல் சூழிலங்கைக் கயவாகுவென் பான் நங்கைக்கு நாட்பலி பீடிகை கோட்டமுந்துறுத்தாங்கு