சமயநிலை
97
அரந்தை கெடுத்து வரந்தருமிவளென ஆடித்திங்கள்கவையி
னாங்கோர் பாடிவிழாக்கோள் பன்முறையெடுப்ப மழைவீற்றிருந்து வளம்பல பெருகிப் பிழையா விளையு ணாடாயிற்று.
(4) '“அது கேட்டுச் சோழன் - பெருங்கிள்ளி கோழி
யகத்து எத்திறத்தானும் வரந்தருமிவளோர் பத்தினிக்கடவு
ளாகுமென நங்கைக்குப் பத்தினிக்கோட்டமுஞ் சமைத்து
நித்தல் விழாவணி நிகழ்வித்தோனே” எனக் காண்க.
7-ம் அதி :-
செங்குட்டுவன் சமய நிலை.
சேரன் செங்குட்டுவன் கொண்டொழுகிய மதம் பொதுவாக வைதிக சமயமேயாயினும், சிறப்பாக இவனைச் சைவாபிமானமுள்ளவன் என்று சொல்லுதல் தகும். இவ்வேந்தன் சிவபெருமான் திருவருளால் உதித்தவனென்றும், அப்பெருமானருள் கொண்டு விளங்கியவனென்றும் இவன் சகோதரரே கூறுவர்.
'“செஞ்சடை வானவன் அருளினில் விளங்க
வஞ்சித் தோன்றிய வானவ கேளாய்”
(சிலப். 26. 98-9)
“ஆனே றுயர்த்தோ னருளினில் விளங்க
மாநிலம் விளக்கிய மன்னவன் ”
(சிலப். 80. 141-2)
இவனது சைவாபிமானத்தை அடியில் வரும் மற்றொரு
செய்தியும் விளக்குவதாம். வஞ்சியினின்று வடநாட்டி யாத்திரைக்குப் புறப்படுங்காலத்தே, இவ் வேந்தன், சிவபிரான்
7