102
சேரன் செங்குட்டுவன்
பீடா ருறந்தையும் - ஒலிபுனற் புகாருங் கலிகெழுவஞ்சியும்” [1] எனச் சோணாடு தங்காலத்தில் இரண்டு இராஜதானிக் ளுடையதாயிருந்ததை இளங்கோவடிகளும் குறிப்பிடுவர். [2] செங்குட்டுவன் தாயுடன் பிறந்த அம்மானும் சோழன் மணக் கிள்ளியின் மகனுமாகிய நெடுங்கிள்ளி உறையூரை ஆண்டு வந்தனன். [3] இவ்வுறையூர்ச் சோழர்க்கும் புகார்ச் சோழர்க்கும் பெரும்பகை மூண்டு போர் நிகழ்ந்து வந்ததாகப் புறநானூற்றால் அறியப்படுகின்றது. புகார்ச்சோழரென்பவர், கரிகாலன் மகனாகக் கருதப்படும் கிள்ளிவளவனும் [4] அவன் தம்பியாகிய நலங்கிள்ளியுமாவர். இவருடன் காரியாற்றங் கரையில் நடந்த போரிலே, செங்குட்டுவனம்மானாகிய நெடுங்கிள்ளி இறந்தான் என்பது, ‘காரியாற்றுத் துஞ்சிய‘’ என அவன் விசேடிக்கப் படுதலாலும் [5] அப்போரில் கிள்ளி வளவன் தம்பியே வெற்றி பெற்றவனென்பது, '“ஆர்புனை தெரிய லிளங்கோன் றன்னால், காரியாற்றுக் கொண்ட காவல் வெண்குடை, வலி கெழு தடக்கை மாவண் கிள்ளி” எனச் சாத்தனார் மணிமேகலையிற் கிள்ளிவளவனைக் கூறுதலாலும் [6] புலப்படுகின்றன. செங்குட்டுவன் அம்மானாகிய நெடுங்கிள்ளி இங்ஙன மிறந்ததும், அவன் மகனான பெருங்கிள்ளி உறையூரிற் பட்ட மெய்தினன். திருக்கோவலூர்ச் சிற்றரசனும் பெருவீரனுமாகிய மலையமான் திருமுடிக்காரி [7] என்பவன் உறையூர்ச் சோழர்க்கு