பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமகாலத்தரசர்.

105


பித்துக்கூறுவர் இளங்கோவடிகள்.வழிமாற்று[1]* இப்பாண்டியன் பெரிய வீரனும் அரியபுலமையும் உடையவன். இவன் பாடிய பாட லொன்று புறநானூற்றிற் (183) காணப்படுவது கொண்டு, இவனது புலமையும் தருமசிந்தையும் அறியலாம். இச்செழி யன் கண்ணகி வழக்கைக் கேட்டு இறந்ததும், கொற்கையில் இளவரசாய் ஆட்சிபுரிந்துவந்த வெற்றிவேற்செழியன் தென் னாட்டாட்சிக்கு உரியவனாயினன். செங்குட்டுவன் வடக்கே யாத்திரை சென்றிருந்த காலத்தில், இச்செழியனுக்கு முடி சூட்டுற்சவம் நடைபெற்றது.[2] இவன் பட்டமெய்தியதும், நன்மாறன் என்னும் வேறு பெயர் பூண்டனனென்று கருதப் படுகிறது. கோவலன் கொலையுண்டமைக்குப் பொற்கொல்லனே காரணமாயிருந்தமையால் அச்சாதியா ரனைவர்மேலும் இப்பாண்டியன் பெருஞ்சீற்றங்கொண்டு, அவர்களுளாயிரவரைக் கண்ணகியின் பொருட்டுக் களவேள்விசெய்து கொன் றானென்றும், அதற்கு அப்பத்தினி உவந்தருளினளென்றுங் கூறுவர்[3]. இவ்வரசன் சிலகாலமாட்சிபுரிந்து இறந்ததும், இவன் மகனாய்ப் பட்டமெய்தியவன் நெடுஞ்செழியன் என்பவ னாகத் தோற்றுகின்றான். மிகச்சிறுபிராயத்திலே சிறந்த வீர னென்று பேர் பெற்றவன், இச்செழியன். தன்னுடனெதிர்த்த தமிழாசர் எழுவருடன் இவன் அதிபால்யத்தில் தலையாலங் கானம் என்றவிடத்து நிகழ்ந்த போரில் வெற்றி பெற்ற செய்தி முன்னூல்களிலே பெரிதும் புகழப்படுகின்றது. [4]இந்நெடுஞ் செழியனுக்குப் பின் பட்டமெய்தியவன் உக்கிரப் பெருவழுதி

-


  1. * சிலப். மதுரைக்காண்டத்தினிறுதிக் கட்டுரை
  2. t சிலப். 27: 114-138.
  3. t இந்நூல். பக்-96.
  4. . S புறம். 77; அகம்-36. சின்ன மனூர்த் தாமிர சாஸனமும் இவன் போர்ச்செய்தி கூறுதல் அறியத் தக்கது. (Vide Madras G. 0. No. 503 Public dated 27-6-07.)