பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/122

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

சேரன் செங்குட்டுவன்

[ வேறு அரசர்கள்.)

இனிச்சேரன் செங்குட்டுவன் காலத்திருந்த அறுகையரான அரசர்கள்:- (1) கொங்கிளங்கோசர், (2) கயவாகு, நூற்றுவர் கன்னர், (4) அறுகை என்போர். இவருள், செங்கிகிளங்கோசரென்போர் குடகு நாட்டை ஆண்டவர்கள்.[1] கயவாகு இலங்கையை ஆட்சிபுரிந்தவன். நூற்றுவர்கன்னர் என்போர் கங்கையின் வடகரையிலுள்ள பிரதேசங்களையும் மாளுவநாட்டையும்[2] ஆட்சிபுரிந்தோர். அறுகையென்பவனும் அவ்வடநாட்டரசரில் ஒருவனாகத் தெரிகின்றது. இவரெல்லாம் செங்குட்டுவனுக்கு மிக்க நட்பாளராக விளங்கியவரென்பது சிலப்பதிகாரம் பதிற்றுப்பத்து முதலியவற்றால் தெளிந்தது. இன்னோர் செய்திகள் “செங்குட்டுவன் காலவாராய்ச்சி” யினராகக் கொண்டு, உறையூர்ச் சோழர்கிளையில் மணக்கிள்ளியையும், அவன் மகனாக நெடுங்கிள்ளியையும், அவன் மகனாகப் பெருநற்கிள்ளியையும் காட்டுதலும், புகார்ச்சோழர்கிளையில், கரிகாலன், கிள்ளிவளவன், நலங்கிள்ளி என்பவரை முறையே காட்டுதலும் பொருத்தமாம். மணக்கிள்ளியின் மகளும் நெடுங்கிள்ளிக்குடன் பிறந்தாளுமாகிய நற்சோணை, செங்குட்டுவன்தாயென்பதுங் குறிக்கத்தக்கது. பாண்டியவமிசாவளியாகப் பிள்ளையவர்கள் குறிப்பிட்டவை, முன்னூல்களோடு பொருந்தும்.


  1. இதனால், முற்காலத்துக் கொங்குதேசம், குடகுகாடாயிருந்தமை பெறப்படும்.
  2. ‘குடகக் கொங்கரு மாளுவவேந்தரும்’ என்புழி இளங்கோ வடிகள் குறித்த மாளுவவேந்தர், செங்குட்டுவன் நட்பரசரான கன்ன ரேயாதல் வேண்டும். ஏனெனில், கண்ணகியின் சிலைக்கு மிகவும் உதவிசெய்த கன்னர், அப்பத்தினிப் பிரதிஷ்டைக்கு வந்திருக்கத்தவறாராதலால், அவர் வருகையை அடிகள் குறியாதிரார் என்க.