இருபெரும் புலவர்கள்.
113
செங்குட்டுவன் சகோதரரான அவ்வடிகளே பாடக்கருதியிரு
ந்தனரென்றும், சாத்தனார் மணிமேகலை துறவைப் பாடி முடித்
துவிட்டமை தெரிந்து சிலப்பதிகாரத்தை மட்டும் அவரியற்
றினரென்றும் அடியார்க்குநல்லார் பதிகவுரையிற் குறிப்பிடு
வர். சாத்தனார் தாம்பாடிய மணிமேகலையை இளங்கோவடி
களைத் தலைமையாகக்கொண்ட அவைக்கண்ணே அரங்கேற்றி
னரென்பதும், இளங்கோவடிகளும் தம் சிலப்பதிகாரத்தைச்
சாத்தனார்முன்பு அரங்கேற்றினரென்பதும் அவ்விருவரும்
பாடிய பதிகங்களால் தெரிகின்றன. சாத்தனார் செங்குட்டு
வனாற் பெரிதும் அபிமானிக்கப்பட்டதோடு அவன் சபையை
அலங்கரித்த புலவர் பெருமானாகவும் விளங்கினர்.[1] * மலைவளங்
காணவேண்டிச் செங்குட்டுவன் பேரியாற்றங்கரையில் தங்கி
யிருந்தபோது, இவரும் அவனுடன் சென்றிருந்து, சேரனது
செல்வப்பொலிவைக் கண்டு வியந்தனர் என்பது "கண்களில்
மயக்கத்துக் காதலோடிருந்த - தண்டமி ழாசான் சாத்தன்"
என அடிகள் கூறுதலால்[2] அறியலாம். தம் நகரத்தரசனாக
விளங்கிய ஆரியப்படைந்த நெடுஞ்செழியன் கோவலன்
கொலை காரணமாக இறந்ததும், சாத்தனார் வஞ்சி சென்று
செங்குட்டுவனால் ஆதரிக்கப்பட்டார் என்பதும், பின் பாண்டி
நாட்டை அந்நெடுஞ்செழியன் தம்பி வெற்றிவேற் செழியன்
என்ற நன்மாறன் ஆட்சிபுரியத்தொடங்கியதும், இவர், தம்
ஊராகிய மதுரை சென்று அப்பாண்டியனால் அபிமானிக்கப்
பட்டனரென்பதும் உய்த்தறியப்படுகின்றன. சாத்தனார் இந்
நன்மாறனைப்பாடிய பாடலொன்று புறநானூற்றுள் (59)