பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

சேரன் - செங்குட்டுவன்

வஞ்சிமாநகரம்.

தமிழ்நாட்டை ஆண்டுவந்த மூவேந்தருள்ளே, சோழ பாண்டியர்க்கு உறையூர் புகார் மதுரைகள் எவ்வாறு பழைய தலைநகரங்களாக விளங்கினவோ, அவ்வாறே, சேரரது தொ ன்றுதொட்ட இராஜதானி [1]வஞ்சிமாநகரமாகும். மேல்கடலில் தொண்டி மாந்தை என்னுந் துறைமுக நகரங்களும், சேரர்க்குச் சிறந்த தலங்களாயினும் வஞ்சிமாநகர்க்கு அவை அடுத்த தரத்தனவேயாம். இவ்வஞ்சிக்குக் கருவூர் என்பதும் ஒரு பழம்பெயர். இந்நகரம் ஆன்பொருநையாற்றங் கரையில் அமைந்து விளங்கியதாம்.

“நெடுந்தேர்க் கோதை
திருமா வியனகர்க் கருவூர் முன்றுறைத்
தெண்ணீ ருயர்கரைக் குவைஇய
தண்ணான் பொருதை மணலினும் பலவே”

(அகநானூறு. 93.)


“தண்பொருநைப் புனற்பாயும்
விண்பொருபுகழ் விறல் வஞ்சி” (புறம், 11.)

“தண்பொருநை சூழ்தரும் வஞ்சியார் கோமான்” (சிலப்-29.)

எனக் காண்க. ஆன்பொருநையாற்றின் அலை, வஞ்சிக்கோட்டைமதியிற் றாக்கும்படி அவ்யாறு நெருங்கிச் செல்வதென்பது, “வஞ்சிப் புறமதி லலைக்குங் கல்லென் பொருநை”


  1. இந்நகரத்தைப் பூவாவஞ்சி (சிலப். 26. 50), வாடாவஞ்சி (28180) பொற்கொடிப் பெயர்ப்பஉேம் பொன்னகர் (மணி. 92.) கோ நகர் (சிலப். 27. 255) என முன்னூல்கள் அணிந்து கூறும்.