பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வஞ்சிமாநகரம்

117

என்னும் புறப்பாட்டடியால் (387) விளங்கும். இவ்வான் பொருநை— ஆனி, வானி, ஆன்பொருந்தம், தண்பொருநை, சூதநதி எனவும் கூறப்படும்.[1]

கருவூராகிய வஞ்சிக்குப் பக்கத்தோடும் ஆன்பொருநை யோடு நேர்கிழக்கிற்செல்லும் காவிரியும், குடவனாறும் சங் கமமாகும் கூடலொன்று உண்டு ; இதனை—

“செங்குணக் கொழுகுங் கலுழி மலிர்நிறைக்
காவிரி யன்றியும் பூவிரி புனலொரு

மூன்றுடன் கூடிய கூட லனையை” (பதிற்-50.)

எனச் செங்குட்டுவனைப் பரணர் பாடுதலால் அறியலாம். “மூன்றுடன் கூடிய கூடலென்றது , அக்காவிரிதானும் ஆன் பொருநையும்[2] குடவனாறுமென இம்மூன்றுஞ் சேரக்கூடிய கூட்டம்” என்பது பழையவுரை. இந்நதிகளன்றிக் காஞ்சியென்னும்[3] ஓர் யாறும் செங்குட்டுவனாட்டிற் பிரபலம் பெற்றது ; ‘தீனம்புன லாய மாடுங் - காஞ்சியம் பெருந்துறை’ எனக் காண்க.

இவ்வஞ்சிமாநகரின் பழைய அமைப்பு, முன்னூல்களில் அடியில் வருமாறு சிறப்பிக்கப்படுகின்றது. இம்மூதூரின் கோட்டைக்கு வெளியே தேவர் கோட்டங்களும் பொதுஸ்தலங்களும் ஜைநப்பள்ளிகளும் பொழில்களும் பொய்கை


  1. பிங்கல நிகண்டு, 4. 118. பொருநை என்பது தாமிரபரணிக் குத் தனித்த பெயராதலால், அதனின் வேறென்பதைக் குறித்தற்கு ஆன்பொருநை என விசேடிக்கப்பட்டதாகத் தெரிகின்றது.
  2. குடவனாறு, கருவூர்க்குத் தென்கிழக்கே 12- மைலில், ஆம்பிரா வரியுடன் சங்கமமாகின்றது. இதனைக் காவிரியுடன் கலப்பதாக உரைகாரர் எழுதியதற்குக் காரணந்தெரியவில்லை.
  3. குடவனாறு, கருவூர்க்குத் தென்கிழக்கே 12- மைலில், ஆம்பிரா வரியுடன் சங்கமமாகின்றது. இதனைக் காவிரியுடன் கலப்பதாக உரைகாரர் எழுதியதற்குக் காரணந்தெரியவில்லை.