பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

சேரன் - செங்குட்டுவன்


மாளிகை"*[1] என்னும் ஓர் அழகிய மந்திரமும் அமைந்திருந் தது. இது வேண்மாடம்' எனவும் வழங்கப்படும். [2]செங் குட்டுவன் மாற்றாந்தாய்ப் பாட்டனும், பொதினிமலைத் தலை வனுமான வேளாவிக்கோமான் பெயர் பெற்றிருத்தலால், இம் மாளிகை அவன் வசித்து வந்தது போலும். இவ்வழகிய மாடம் செங்குட்டுவன்காலத்தே அந்நியவரசர் தங்குதற்கெ ன்று உபயோகப்பட்டது.[3] திருமால் பள்ளிகொண்டருளும் ஆடகமாடம்[4] என்ற ஆலயமொன்றும் வஞ்சிக்குப் பக்கத்தி ருந்ததாகக் கருதப்படுகின்றது.

இங்ஙனம், சேரரது பழைய இராசதானியாகச் சிறப்பிக் கப்பட்ட வஞ்சியென்பது யாதென ஆராயுமிடத்து, அஃது, இப்போது திருச்சிராப்பள்ளி ஜில்லாவைச் சார்ந்துள்ளதும், கொங்குநாட்டுத் தலங்களுள் ஒன்றுமாகிய கருவூரே[5] என்ப தற்கு வேண்டிய பிரமாணங்கள் எதிர்ப்படுகின்றன. முன் னூல்களிற் கூறப்பட்டவாறே, இவ்வூர் ஆம்பிராவதி நதிக் கரையில் உள்ளதாம் ; ஆம்பிராவதி என்பது, ஆன்பொருநை யின் வடமொழிப்பெயர் ; பொற்பு மலியாம் பிரவாதியான் பொருநை யெனவும் புகலுவரால்" என்பது கருவூர்ப்புரா ணம்[6] (ஆம்பிரம் - மாமரம்] சூதநதி என்று பிங்கல நிகண்டு இதற்கொரு பெயர் கூறுவதும் ஆம் பிராவதி என்பதோடு

ஒத்த பொருளுடையதேயாகும்; (சூதம் - மா). இந்நதி


  1. * சிலப்பதி. 28. 197-98.
  2. புறநானூறு. 18
  3. 1 சிலப். 28. 198.
  4. * ஷை, 26. 62; 30. 51.
  5. 1 கர்ப்ப புரி என்பர் வடநூலார்.
  6. 4 இப்புராணம் இற்றைக்கு 290 - வருஷங்கட்கு முன் இயற்றப் பட்டதென்பது. அதன் பாயிரச் செய்யுளால் அறியப்படுகின்றது; இனிய வாக்குடையது; நூலாசிரியர் பெயர் முதலிய வரலாறுகள் விள ங்கவில்லை.