பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வஞ்சிமாநகரம்.

125

என்பது, கருவூர்ப் பசுபதீசுவரர்க்கு ஆண்டுதோறும் இக் காலத்தும் நடைபெறும் பங்குனியுத்தரத்திருவிழாவாகவே கருதப்படுகின்றது.


இனி, வஞ்சியை மேற்கூறிய கருவூராகக் கொள்ளாது, மலைநாட்டுக் கொடுங்கோளூர் அல்லது திருவஞ்சைக்களம் என்று கருதுவாரும், அந்நாட்டு மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்துப் பேரியாற்றங்கரையிலுள்ள திருக்கருர்*[1] என்று கருதுவாருமெனச் சரித்திரவறிஞர் பலராயினார். இவற்றுள் முதலிற் கூறியது, அடியார்க்குநல்லார்க்கும் ஒத்த கொள் கையாயிருத்தலே வியப்பைத்தருவதாம்.[2] ஆனால், இவ்வி ரண்டுபக்ஷங்களும், ஆராயுமிடத்துச் சிறிதும் உறுதிபெற்றன வாகக் காணப்படவில்லை. முதலாவது - திருவஞ்சைக்களம் என்பது கொச்சிக்கு வடக்கே 10 - மைல் தூரத்தில் பேரி யாறு மேல்கடலிற் சங்கமமாகுமிடத்து உள்ளதாம். மகோ தை என்னும் கொடுங்கோளூரையடுத்துள்ள இவ்வூர், பாடல் பெற்ற பழைய சிவதலங்களுள் ஒன்றாகும். இத்தலத்தைப் பற்றிச் சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய பதிகத்தில் - "கடலங் கரைமேன் மகோதை யணியார் பொழில் அஞ்சைக்களத் தப் பனே" என்ற தொடரே பாட்டிறுதிதோறும் பயின்று வருகின் றது. எனவே, அந்நாயனார் காலத்துக்கு முன்பு அத்தலத்

துக்கு வழங்கிவந்த பழைய பெயர் அஞ்சைக்களம் என்பதே


  1. *திருக்கரூர் (Tiru-karur), கொச்சிக்கு வடகிழக்கே 28 - மைலி லும், கோதைமங்கலத்துக்கு 3-ம் மைலிலும் உள்ளதென்றும், அஃது இப்போது பாஜராயிருப்பினும் கிலமான பல பெரிய கட்டிடங்களும் கோயிலும் உடையதென்றும் கூறுவர். (The Tamils 1800-years ago. p. 15).
  2. 1 சிலப்பதி. பதிகம்.3. உரை: