பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

சேரன் செங்குட்டுவன்


விளக்கமாகும். ஆகவே, அத்தலத்தை வஞ்சியோடும் சம்பந்த முடையதாகக் கருதற்குச் சிறிதும் ஆதாரமின்மை காண்க.

இனிப் பழைய சேரர் தலைநகரான வஞ்சிமாநகரம் கடற் கரைக்கண்ணதாயின், அதனைச் சிறப்பிக்கப்புகுந்த சிலப்பதி கார மணிமேகலை முதலிய முன்னூல்கள், உடனொத்த புகார் கொற்கைமுதலிய பட்டினங்களைப்போலவே வஞ்சியையும்*[1] அதன் கடல்வளச் சிறப்பால் வருணித்துக் கூறாமற்போகு மா? ஒருகாலுமில்லை. அங்ஙனம் கடற்கரைச் சம்பந்தம் வஞ் சிக்குக் கொஞ்சமும் காணப்படாமையே, அஃது உள்நாட்டு நகரமென்பதை[2] விசதமாக்கவல்லது. மேலும், கருவூர் என்ற பெயர் கொடுங்கோளூர் அல்லது திருவஞ்சைக்களத் துக்கு உள்ளதாகப் பிரமாணமொன்றுங் காணப்படாமையும் அறிக. இனி, ஸ்ரீ: கனகசபைப்பிள்ளையவர்கள் மேற்குத்தொ

டரையடுத்துப் பேரியாற்றங்கரையிலுள்ள திருக்கரூரே


  1. * செங்குட்டுவனது வடயாத்திரையில் அவன்சேனை. சென்ற தைக் கூறுமிடத்து "வஞ்சி நீங்கித் - தண்டத் தலைவருந் தலைத்தார்ச் சேனையும், வெண்டலைப் புணரியின் விளிம்புசூழ் போத” என இளங் கோவடிகள் கூறியிருப்பது, அச்சேனையின் பரப்புமிகுதியை வருணித்த படியேயன்றிப் பிறிதன்று. வஞ்சி கடற்கரைக்கண்ண தாயின், தானை களின் பெருக்கைக் கூறவந்த அவ்விடத்தே, அவை கடற்கரை விளிம்பு வரை சென்றனவென்று அடிகள் கூறுவதில் பெருமையும் வியப்புமில் லையென்க. இனி, செங்குட்டுவன் வடநாட்டினின்று திரும்பிவரும் போது, நால்வகை நிலத்தாரும் அடைந்த மகிழ்ச்சிகளை வருணிக்கு முறையில், நெய்தனிலமாக்கள் செய்தியும் கூறப்பட்டதன்றி, கடற் கரைச்சம்பந்தம் பற்றி யன்றென்பதும், அறியத்தக்கது.
  2. தாலமி (Ptolemy) என்னும் பூர்வயவனாசிரியர், கருவூரை நேரிற் கண்டெழுதிய குறிப்பில், அஃது உள்நாட்டிலிருந்த நகரமாக வே கூறினர் என்பர். (The Tamils 1800 years ago. p. 20).