பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

சேரன் செங்குட்டுவன்


தியை அடிகள் குறிக்கவில்லையாதலால், அரசன் சென்றுவந்த பேரியாற்றங்கரை அவன் தலைநகர்க்கு அணித்தாதல் வேண் டும் - என்பதாம் ; அரசனும் உரிமையும் மலை காண்குவம் என்று வந்து கண்டவன்றே வஞ்சி புகுந்தமையானும் என அடியார்க்குநல்லாரும் இக்கருத்தே பட எழுதினார். ஆனால், செங்குட்டுவனது நீண்ட யாத்திரையைக் கூறுமிடமெங்கும் அவன் இடையிற்றங்கிய விவரத்தையும் இளங்கோவடிகள் கூறிச்செல்லு மியல்புடையரோ எனின், இல்லை. இதற்கு நீலகிரியினின்று செங்குட்டுவன் கங்கைக்கப்பால் வரை சென் றுவந்த நெடும் பிரயாணத்தை அடிகள் மிகச் சுருக்கிக் கூறிச் செல்வதே, தக்க சான்றாகும். அன்றியும், வஞ்சியாகிய கரு வூருக்கும் பேரியாற்றங்கரைக்கும் நெடுந்தூரமுண்டென்ப தற்குச் சிலப்பதிகாரத்தே மற்றொரு சிறந்த சான்றுமுண்டு; இளங்கோவடிகள் தம் தமயனது வடயாத்திரையை வருணிக் குமிடத்து ஒருநூற்று நாற்பது யோசனை தூரம், இந்திரன் யா னைகளைப் பரப்பிச் செல்வது போலச் சென்றான்" என்கிறார்.*[1] ஈண்டு 'ஒருநூற்று நாற்பது' என்னுந்தொடர், இந்திரனது யானைப்பரப்பின் தூரத்தைக் குறிப்பதென்பதினும் செங்குட் இவனது பிரயாண தூரத்தைக் குறிப்பதென்பதே பொருத்த மாகும். இன்றேல், நூற்று நாற்பதென்ற எண்ணை அடிகள் குறிப்பிடுவதற்குத் தக்க காரணம் வேண்டுமன்றோ ? இந்திர னுக்கே அத்தொடர் விசேடிக்கப்பட்டதாயினும், அத்தொ கையினளவு தூரத்தை, அடிகள் சேரன் பிரயாணத்துக்கு

உவமித்திருப்பது, அவன் சென்றுவந்த பேரியாற்றங்கரை


  1. * ஈவிளையாட்டு விரும்பிய விறல்வேல் வானவன் - ஒரு நூற்று காற்பது யோசனை விரிந்த - பெருமால் களிற்றுப் பெயர்வோன் போ ன்றும் என்பது மூலம் (சிலப். 25-11, 15, 16.)