பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வஞ்சிமாநகரம்.

129

வஞ்சிமாநகர்க்குச் சமீபித்ததன்று என்பதை வெளியாக்கும் என்பதில் ஐயமில்லை*[1].


மேற்கூறியவாறு, கருவூரையடுத்து ஆம்பிராவதியும் காவிரியுங்கலக்கும் கூடலையும், நொய்யல் அல்லது காஞ்சி மாந்தியையும் பரணர் செங்குட்டுவனுக்கு உவமையாகக் கூறியிருத்தலும், ஆன்பொருநைக் கரையில் வஞ்சியுள்ள தாகச் சொல்லப்படுதலும், கருவூர்க்கும் பேரியாற்றுக்கும் பெருந்தூரமுண்டென்பதை இளங்கோவடிகள் குறிப்பிப்ப தும் - சேரரது பழைய தலைநகரம் அந்நதிகள் பாயுமிடங் களுக்குப் பக்கத்தது என்பதற்குத் தக்க சான்றாதல் காண லாம். கொச்சிராஜ்யத்துள்ள கொடுங்கோளூர் அல்லது திருவஞ்சைக்களமாயின், அம் மலைநாட்டு நதியொன்றையும் பரணர் செங்குட்டுவனுக்கு உவமிக்காமல், மேற்காட்டிய

ஆறுகளையே[2] கூறிச்செல்வதற்குத் தக்க காரணம் வேண்டும்


  1. * யோசனையினளவு பலபடியாக வழங்கிவருகின்றது (சீவகசிந் தாமணி. இரண்டாம் பதிப்பு. விசேடக்குறிப்பு. பக். 84 பார்க்க). மலை நாட்டு வழக்குப்படி, யோசனையொன்றுக்கு 4 நாழிகை அல்லது 6 மை லாகக் கொண்டால், 140- யோசனைக்கு 840-மைலாகும். கருவூருக் கும் பேரியாற்றங்கரைக்கும் உத்தேசம் 300 - மைலே யாதலின், இது மிகவும் அதிகமேயாம். இதனால், இளங்கோவடிகள் காலத்து ஒருயோ சனையினளவு 25 மைலுக்குட்பட்டதாக இருந்தது போலும்.
  2. * இந்நதிகளன்றி, அயிரை என்ற நதியும் (சிலப். 28.145) அப் பெயரேகொண்ட மலையும் (பதிற்றுப். 21.) சேரநாட்டில் உள்ளனவா கச் சொல்லப்படுகின்றன. இவற்றுள், அயிரையாறு, சேரர்க்குரிய கொல்லிமலையில் (அகநா. 33. 281.) உற்பத்தியாகிக் காவிரியுடன் மேலணையிற் சங்கமிக்கும் அய்யாறு என்ற நதியாகக் கருதப்படு கிறது. இனி, அயிரிமலை என்பது, குழித்தலைக்கு மேற்கே 4 - மை லில் உள்ள இரத்தினகிரிபோலும்; இதற்கு அய்யர் மலை என்னும் பெயரும் அப்பக்கத்து வழங்குதல் காண்க. கருவூர்க்குக் கீழ்பாலுள்ள