பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

சேரன் - செங்குட்டுவன்

மன்றோ? இதற்கேற்ப, வஞ்சி வஞ்சுளாரணியம் என்ற பெயர்கள் முன்குறித்தபடி, ஆம்பிராவதிக் கருவூர்க்கு இன்றும் வழங்கிவருதல் அறியத்தக்கது. இவையன்றி, பழைய ரோம சக்கரவர்த்திகளாகிய அகஸ்டஸ் (Augustus) டைபீரியஸ் (Tiberius), கிளாடியஸ் (Claudius) முதலியோர் நாணயங்கள் இக்கருவூர்ப்பக்கத்தே 1806-ம் வருஷத்துக் கண்டெடுக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருவதும்,[1] இதன் பழைமை பெருமைகளை நன்கு விளக்குவதாம். கருவூர்க் கோட்டை இப்பொழுது அழிபட்ட நிலையில் காணப்படுகின்றது.

இங்ஙனம் ஆம்பிராவதி அல்லது ஆன்பொருநைக் கரையிலுள்ள கருவூரே, சேரரது பழமை பெருமை வாய்ந்த தலைமைநகராயிருப்பவும், அச்செய்தியைச் சங்ககாலத்துக்குப்பிற்பட்ட தமிழ்மக்கள் முற்றும் மறந்துவிட்டனரென்றே தோற்றுகிறது. இவ்வூர்த் திருவானிலைக்[2] கோயிலைப்பற்றிய தேவாரப் பதிகங்களிலேனும் அக்கோயிலிற் கண்ட


செங்குத்தான இவ்வழகிய குன்றினுச்சியில் மிகப்பழைய சிவாலயமொன்று உண்டு. பதிற்றுப்பத்துக் கூறுமாறு, சேரர்களது குலதெய்வமாக விளங்கிய கொற்றவைக்கடவுட்கு இக்குன்று முற்காலத்துச் சிறந்த தலமாயிருந்தது போலும். இனி, ழசிரி என்ற பெயர் கொண்ட ஊரொன்று இப்பக்கத்துள்ளதை நோக்குமிடத்து, சேரர்க்குச் சிறந்த துறைமுகமாய் மேல் கடற்பக்கத்தமைந்த முசிரியை ஞாபகப்படுத்தற்கு உண்ணாட்டில் அவ்வரசர் அதன் பெயரிட்டதுபோலத் தோற்றுகிறது. இப்பக்கத்துத் தோட்டிய முதலியவிடங்களில் மதுரைக்காளியம்மன் என்ற பெயராலும் பிறவகையாலும் பிடாரிவழிபாடு பெரிதும் நிகழ்ந்து வருவதானது, பூர்வத்திற் பத்தினி வணக்கமாயிருந்ததே காலாந்தரத்தல் அங்ஙனம் மாறியதோ என்று கருதவும் இடந்தருகின்றது.

  1. Gazetteer of Trichinopoly. p. 260.
  2. திருவானிலை என்பது, கருவூர்ப் பசுபதீசுவரர் கோயிலை.