பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வஞ்சிமாநகரம்.

133


சங்க நூற்பிரமாணம் ஒன்றுமே கிடையாதாயினும் அடி யார்க்குநல்லாருள்படப் பலரும் இதனையே மாறிக்கருது வாராயினர். கொடுங்கோளூர் என்ற பெயரோ பழைய நூல்களுக்குச் சிறிதுந் தெரியாததொன்றாகும். இதனையடுத் துள்ள திருவஞ்சைக்களத்துக்கும் வஞ்சிக்கும் எவ்விதப் பொருத்தமும் இல்லாமையால், சரித்திரவறிஞர் அவ்விரண் டனையும் பொருத்தியெழுதுவனவெல்லாம் முன்னைவழக் கோடு முரணுவதேயென்க. இனிச் சிலர், சிலப்பதிகாரமணி மேகலைகளில், இக்காலத்து வழங்கும் மலைநாட்டுச் சொற்களும் வழக்குகளும் காணப்படுவது கொண்டு, செங்குட்டுவனது தலைமை நகரும் அம்மலைநாட்டிருந்ததாகக் கருதுவர். மலை நாட்டு வழக்கென்று அவர்கள் காட்டுவனவெல்லாம் பொது வாகப் பழைய தமிழ்வழக்குகளேயன்றி வேறில்லை. அத னால், நம் காலத்து வேறுபட்டது போலவே, செங்குட்டுவன் காலத்தும் அவ்வழக்குகள் வேறுபட்டிருந்தன என்று கருது தல் பொருந்தாதென உணர்க. ஒருகால், சிற்சில வழக்குகள் மலைநாட்டுக்கே சிறப்புடையவாயினும், நம் சேரனுக்கு அம் மலைநாட்டினும் உரிமையுந் தலைமையுமுண்டாதலால், அது பற்றி அவனைப்பற்றிய பாடல்களில் அவ்வழக்குகள் பயின் றன என்று கருதுதலும் இருக்காது. இதுவரை யாம் கூறி வந்த பிரபல பிரமாணங்களால் சேரராஜதானியாகிய வஞ்சி யென்பது, ஆம்பிராவதிக் கரையிலுள்ள கருவூரேயன்றிக் கொடுங்கோளூரேனும் திருவஞ்சைக்களமேனும் ஆகாவென் பதும், கனகசபையவர்கள் கருத்துப்படி, பேரியாற்றங்கரைத் திருக்கருவூரைப் பழைய வஞ்சியாகவும், அப்பேரியாற்றை யே பொருநையாகவும் கொள்வதற்குப் பொருத்தமும் பிர மாணமும் இல்லையென்பதும் நன்கு விளங்கத்தக்கன.