அரசியல் .
189
யுத்தத்திற்கு அரசனுடன் சென்று வேண்டிய காரியங்களை
நிர்வகிக்கவும் வல்லவர். இன்னோர் இராஜசமுகங்கட்கு
அடுத்தடுத்துச் சென்று வருபவராதலால், சட்டையும் தலைப்
பாகையுந் தரித்திருப்பர். இவரைக் கஞ்சுகமுதல்வர் எனவும்
வழங்குவர் ; சஞ்சயன் முதலாத் தலைக்கீடு பெற்ற கஞ்
சுக முதல்வரீரைஞ் நூற்றுவர் எனத் தம் தமையனுக்கி
ருந்த தூதுவரைப்பற்றி இளங்கோவடிகள் குறித்தல்
காண்க.*[1] இனிச் சாரணரென்போர் ஒற்றராவார். இன்
னோர் , இக்காலத்துப்போலவே, முற்காலத்தும் அரசர்க்குக்
கண் போன்று விளங்கினர். செங்குட்டுவனுடைய ஒற்றர்
கள் அந்நிய நாடெங்கும் சஞ்சரித்து வந்தனரென்றும், அன்
வாறே வேற்றரசரொற்றர்களும் பெருவீரனான நம் சேரன்
நாட்செய்திகளைத் தெரிதற் பொருட்டு வஞ்சி மாநகரில்
மறைந்து வசித்தனரென்றும் சொல்லப்பட்டுள்ளன.[2] மேற்
கூறியவர்களன்றிக் கரணத்தியலவர் (கணக்கர்), கருமவிதின்
(ஆணை நிறைவேற்றும் அதிகாரிகள்), கனகச்சுற்றம் (பண்
டாரம் வகிப்போர்), கடைகாப்பாளர் (அரண்மனை காவலர்),
நகரமாந்தர், படைத்தலைவர், யானை வீரர், குதிரைவீரர்
எனப்பட்ட எண்பேராயத்தாரும் செங்குட்டுவன் அரசியலில்
தலைமைபூண்டிருந்தனர்.[3]
செங்குட்டுவனது அரசியல் முத்திரையானது வில்,
கயல், புவி என்னும் மூன்றும் அமைந்ததோர் இலாஞ்சளை
யாகும். இதனைத் "தென்றமிழ் நாட்டுச் செழுவிற் கயற்
புலி, மண்டலை யேற்ற வரைக்' என்பதனால் அறிகள்[4]