120
சேரன் செங்குட்டுவன்
சோழபாண்டியர் அடையாளங்களாகிய புலியையும் மீனையும் தனக்குரிய வில்லொடு சேர்த்து நம்சோன் இலச்சினையாகக் கொண்டிருந்ததை நோக்குமிடத்து, அக்காலத்துத் தமிழ் வேந்தருள் இவனே தலைமை வகித்தவனென்பது புலப்படு கின்றது. இவ்வாறே, இவ்வேந்தன் சோழ பாண்டியர்க்கும் மேம்பட்டவன் என இளங்கோவடிகள் பலமுறை கூறுவர்.[1]*
செங்குட்டுவனது தலைமையதிகாரிகளும், அந்தணர் புலவர் குடிகளும் அவனிடம் வந்து ஒன்று கூறும்போது, பேச்சின் தொடக்கத்தும் முடிவிலும் அரசே! வாழ்க என்று அவனை வாழ்த்துதல் பழைய முறையாக இருந்த தென்பது இளங்கோவடிகள் வாக்கால் நெடுகவும் உணரப் படுகின்றது. இதனை, வடநாட்டியாத்திரை' பத்தினிக் கடவுளைப் பிரதிஷ்டித்தல்" என்ற அதிகாரங்களைக் கொண்டு அறியலாகும்.
செங்குட்டுவன் திருமுகமெழுதுவோர் 'கண்ணெழுத் தாளர்' எனப்படுவர்; கண்ணெழுத்தாளர் காவல் வேந்தன், மண்ணுடைமுடங்கலம் மன்னவர்க்களித்து" எனக் காண்க.[2] கண்ணெழுத்து என்பது சங்கநாளில் வழங்கிய தமிழெழுத் தின் பழைய பெயராகத் தோற்றுகிறது. செங்குட்டுவனது வடயாத்திரையில் பண்டங்கள் ஏற்றிச்சென்ற வண்டிகள் இன்னின்ன சரக்குடையவை என்றெழுதப்பட்டிருந்தன என் பதை அடிகள் கூறுமிடத்து, இருபதினாயிரங் - கண்ணே
முத்துப் படுத்தன கைபுனை சகடமும்[3] என்கிறார் ; இதனாலும் கண்ணெழுத்து , பண்டைத்தமிழெழுத்தின் பெயரே