பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் .

143


கூத்தரிற் சாக்கையர் என்போர் சிறந்தவராகக் காணப்படு கின்றனர்.[1] இச் சாக்கையர் என்ற கூத்த வகுப்பார் மலை நாடுகளில் தம் பூர்வ விருத்தியையே இன்றும் நடத்திவருதல் அறியத்தக்கது.[2]

நம் சேரர் பெருமானுக்கு அடங்கியிருந்த அரசர்கள் தத்தம் திறைகளைக் கொண்டுவந்து தலைநகர்ப் பெரிய பண்டா ரத்திற் சேர்க்குங்காலம் விடியற்காலையாகும். அங்ஙனம் திறைகொணரும்படி அரண்மனையுள் முரசம் அறையப்பட்டு வந்ததென்று தெரிகிறது ; 'ஞாலங் காவலர் நாட்டிறை பயி ருங், காலை முரசங் கடைமுகத் தெழுதலும்' எனக் காண்க[3]


அரசனது பிறந்த நாளானது நகரத்தாரால் ஆண்டு தோறும் ஒரு புண்ணிய தினமாகக் கருதிக் கொண்டாடப் படும் . இப்பிறந்தநாள் பெருநாள் எனவும் பெருமங்கலம் எனவும் வழங்கும். இக்காலத்தே, அரசன் உயிர்களில்டங் காட்டுங் கருணைக்கறிகுறியாக மங்கல வண்ணமாகிய வெள்ளணி அணிந்து, சிறைப்பட்டவரையெல்லாம் விடுவிப் பதும், இரவலர்க்கும் புலவர்க்கும் வேண்டியவாறு அளிப் பதும், தன் தானை வீரர்களைத் தக்கபடி கெளரவிப்பதும் மர பாகும். இதனையே தொல்காப்பியனாரும் சிறந்த நாளணி

செற்ற நீக்கிப் - பிறந்த நாள்வயிற் பெருமங்கலழும் என்று


  1. * சிலப். 28. 65-79; + இச்சாக்கையர் வரலாற்றை ஸ்ரீ. T. K. கோபால பணிக்கர் எழுதிய "மலையாளமும் அதில் வாழ்நரும் (Malabat and its folk) என்ற ஆங்கில நூலின் 184, 185-ம் பக்கங் களிலும், செந்தமிழ் 7-ம் தொகுதி, முதற்பகுதியில் யாமெழுதிய 'மூன்று தமிழ்க்குடிகள்' என்ற வியாசத்திலும் கண்டுகொள்க.
  2. 1 சிலப். 26. 52-8. S மணிமே. 28.9.
  3. 1 சிலப். 27. 44.