பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

சேரன் - செங்குட்டுவன்


விளைக்கும் பகையரசரை அடக்கிமீளுதலும் வழக்கமென்பது, செங்குட்டுவன் செய்திகளினின்றுந் தெரியலாம்.

பண்டைத் தமிழ்வேந்தரது அரசியலுரிமை, பொது வாக, மக்கட்டாயமாய் ஜேஷ்டா நுக்கிரமமாக வந்ததேயாகும். அம்மானுரிமை மருமகனுக்கு வரும் மருமக்கட்டாயம் செங் குட்டுவன் போன்ற சோர்காலத்து வழங்கியதேயன்று. சரித் திரவறிஞர் சிலர், நம் சேரன்காலத்தில் மருமக்கட்டாயமே வழங்கியதாகக்கொண்டு, அக் கொள்கைக்கேற்பப் பழைய பாடங்களைத் திருத்திச் செல்வர். சேரலாதனை இளங்கோ வடிகட்கு மாமன் என்ற முறையிற் கூறாது, தந்தையென்ற முறையில் வைத்து நுந்தை தாணிழலிருந்தோய்"*[1] எனத் தேவந்தி அவ்வடிகளை அழைத்திருப்பதும், சேரவரசுக்குரிய வர்களை, மருகரென்னாது புதல்வர் என்னுமுறையிற் பதிற் றுப்பத்துக் கூறுதலும் (70 , 74.) அவர் கொள்கைக்கு முழு விரோதமாதலோடு, முன்னூல்வழக்கே யின்மையாலும் அது பொருந்தாதென உணர்க.


நம் சேரர் பெருமானது மற்ற அரசியலடையாளங்கள், சேரர்க்குப் பொதுவாக நூல்களிற்கண்டனவெல்லாம் அமை யும். முக்கியமாக, செங்குட்டுவன் முன்னோர் ' எழுமுடி' என்று பெயர்பெற்ற மாலையொன்று உடையராயிருந்தனர் எனப்படுகின்றது[2]. செங்குட்டுவனும் அதனை அணிந்திருந் தவன் என்பது " எழுமுடி மார்ப[3] என்னும் இளங்கோ வடிகள் வாக்கால் தெரியலாம். அரசரெழுவரைச் சேரர் முன்னோர் வென்று, அவ்வெற்றிக் கறிகுறியாக அவரது எழுமுடி போலச் செய்யப்பட்ட மாலையை அணிந்து வந்தவ

ராதலால், அஃது அப்பெயர்பெற்ற தென்பர்.[4]


  1. * சிலப். 30. 174.
  2. பதிற்றுப். 14, 16, 40, 45.
  3. + ஷை. 28. 169.
  4. ஷெ. 14. உரை.