பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

சேரன் செங்குட்டுவன்


யாத்திரையை முடித்துத் திரும்பிய பின்னர், மாடலமறையவ னது உபதேசமாட்சியால் பரகதிவழிகளையே பற்றியவனாய், 5 - வருஷம் அமைதியுடன் ஆட்சிபுரிந்து பின் காலனென் னும் கண்ணிலியுய்ப்ப- மேலோருலகம் எய்தினன்"


இதுகாறும் எழுதிவந்த சரித்திரத்தால் தமிழ்நாட்டின் மகோந்நதநிலைமைக்குச் செங்குட்டுவனது ஆட்சிக்காலமே சிறந்த இலக்காகவிருந்ததென்பது வெள்ளிடைமலை போல் விளக்கமாகும். பண்டைத் தமிழிலக்கியங்களைச் சோதித்து வருமிடத்து, நம் சேரர்பெருமான்போன்ற அறிவுத் திருவும் பெற்ற அருந்திறலரசர் தென்னாட்டில் அதிகமிருந்திலர் என்பது புலப்படத் தடையில்லை. பழைய தமிழ் வேந்த ருள்ளே, இவன்றந்தை சேரலாதனும் சோழன் கரிகாற்பெரு வளத்தானுந் தவிர, வேறெவரும் இவனுக்கிணைகூறத் தக்கவரல்லர்; அவ்விருவரும் தங்கள் வீரப்புகழை நாவலந்தீவ முழுதும் விரித்து நின்றவர்களாயினும், தமிழ் வேந்தர்க்கே அப்பெருமையுரியதென்பதை வடவேந்தர்கள் நன்கறியச் செய்து, அவர்கள் விரித்த புகழை நிலை நிறுத்திய வீரசிகாமணி நம் சோர்பெருமானே யாவன். பிற்காலத்திலே இவனுக்கி ணையாகச் சொல்லத்தக்க தமிழ்வேந்தன் முதலாம் இராஜேந் திரசோழன் ஒருவனே எனலாம்.

சேரன் செங்குட்டுவனது உத்தமகுணங்களுள்ளே இவ னது தெய்வபக்தியை முதலில் வைத்துப் பாராட்டல்தகும். சிவபிரான் திருமால் முதலிய தெய்வங்களிடத்தும் முனிவர்*[1]

அந்தணர் முதலிய பெரியோர்கள்பாலும் இவன் வைத்


  1. *சிலப் 26.93 - 97.