பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குணாதிசயங்கள்.

153


திருந்த பக்தியும், மதாந்தரங்களில் இவனுக்கிருந்த பொதுநோக்கமும் முன்னரே அறியப்பட்டன. இவையன்றி, வீரபத்தினிகளாக விளங்கியவரிடம் இவன்கொண்டிருந்த பெருமதிப்பும் பிரேமையும் ஈண்டும் விரித்தெழுதவேண்டும் மோ? கண்ணகிக் கடவுளின் வணக்கம் தமிழகத்தினும் இலங்கை முதலிய தேசாந்தரங்களிலும் பரவியிருந்ததற்குக் காரணமானவன் இச்சேரனேயன்றோ?

நம் சேரனுக்கிருந்த உயர்குணங்களுள்ளே அடுத்துப் புகழத்தக்கது, இவனது ஏகதார விரதமேயாம். இவனுடைய தர்மபத்தினியாகவும் பட்டமகிஷியாகவும் விளங்கிய இளங் கோவேண்மாள் என்பவளைப்பற்றி முன்னரே கூறினோம்.*[1] வேளிர்குலக்கொழுந்தாகிய இத்தேவி, அறிவு திரு அழகு அமைதி முதலிய உயர்குணங்களெல்லாம் ஒருங்கு வாய்ந்தி ருந்ததோடு, தன் நாயகனுக்கு உற்ற சமயங்களில் உறுதி கூறும் ஆற்றலுடையவளாகவும் விளங்கினள். செங்குட்டுவன் பத்தினிக்கடவுளைச் சிறப்பித்ததற்கும், வீரப்புகழை இமயம்வரை பரப்பியதற்கும் இவ்வுத்தமி கூறிய சமயோசித மான ஒரு சொல்லன்றோ காரணமாயிற்று.[2] தன் கணவனைப் பிரிய நேர்ந்த 32- மாதங்கள் வரை ஊணுமுறக்கமும் கொள் ளாது நாளொப்பனையுஞ் செய்யாது இப்பெருந்தேவி இருந்த பிரிவாற்றாநிலையையும், அவன் ஜயசீலனாகத் திரும்புகின்ற தறிந்ததும் இவளடைந்த பெருமகிழ்ச்சியையும் அடிகள் புகழுந்திறம் பலமுறை படித்து ஆனந்திக்கத்தக்கது. இத்

தகைய ஒப்புயர்வற்ற கற்புடையாட்டியை மனைவியாகப்பெற்


  1. * இந்நூல். பக். 24. 25.
  2. t சிலப். 25. 110-14.