பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

சேரன் - செங்குட்டுவன்


றிருந்த நம் சோர்பெருந்தகைக்குச் சீராமமூர்த்தியன்றி வேறியாவர் சிறந்த உவமையாவார்?

சேரன் செங்குட்டுவனது இயற்கைக்குணங்கள் பல வற்றுள்ளே அவனது வீரத்தன்மையே மேம்பட்டு விளங்கி யிருந்ததென்பது, இவன் சகோதரரும் பரணரும் அக்குணத்தையே அதிகமாகப்புகழ்தலால் தெரிகின்றது. இவனுக்குக் காமவேட்கையினும் போர்வேட்கையே மிக்கிருந்தது என்று புகழ்வர், பிற்கூறிய அந்தணராகிய புலவர்.[1]*இவ்வேந்தனது அந்திய காலத்துக்கு ஐந்து வருஷம் முன்வரை பகைவரையடக்குவதும் நாட்டைப் பெருகச் செய்வதுமே இவன் மேற்கொண்டிருந்த பெருங்கருமமாக இருந்தன.மாடல மறையோன் ஒருகாற் செங்குட்டுவனுக்கு உபதேசிக்கப்புக்கவிடத்தில், அவனது இக்குணத்தையே சுட்டி,

"வையங் காவல் பூண்டநின் னல்யாண்டு
ஐயைந் திரட்டி சென்றதற் பின்னும்
அறக்கள வேள்வி செய்யாது யாங்கணும்
மறக்கள வேள்வி செய்வோ யாயினை.”

(சிலப். 28. 129-32)

எனக் கூறுதல் காண்க. இதனால், தன்னாயுட்காலத்தின் பெரும்பகுதியைப் போர்புரிவதிலே செலவிட்டவன் செங் குட்டுவன் என்பது வெளியாகும். பாணரும் இவன் வீரத் திறத்தையே வியந்து, அனைய பண்பிற்றானை மன்னர், இனி

யாருளரோ முன்னுமில்லை எனக் கூறினர். தமிழாது வீரத்திற் செங்குட்டுவனுக்கு மதிப்பும் அபிமானமும் அதிக


  1. * பதிற்றுப். 50. ஷை 45.