பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

சேரன் - செங்குட்டுவன்


சாஸனங்கள் தக்ஷிணத்துக் காணப்படுதல் போலச் செங் குட்டுவனது வடநாட்டு வெற்றி பற்றிய சாஸனமொன்றுமே அத்தேசத்தில் இதுகாறும் காணப்படவில்லை. அதனால், இவனது வடதேசத்துப் படையெடுப்பில் நவீனர் சிலர் ஐயுறுவர். ஆயினும், இவனுடன்பிறந்த சகோதரர் மட்டும் மன்றி இவன் காலத்துப் புலவர்களிருவரும்,[1] * அவ்வட வெற் றியை விரிவாகவும் தெளிவாகவும் கூறியிருத்தலால், அதனை எளிதிற் றள்ளிவிடுதல் எங்ஙனம் இயலும்? அன்றியும் சேர நாட்டை அடுத்திருந்தவரான கங்கவமிசத்தரசர்கள் இற் றைக்கு 800 - வருஷங்கட்கு முன்னர், இமயம்வரை படை யெடுத்துச் சென்று நேபாளதேசத்தைச் செயித்து அதனைப் பலதலைமுறை ஆண்டுவந்தனர் எனச் சாஸனமூலம் அறியப் படுகின்றது. ஆயின், அவரினும் பெருமைவாய்ந்தவராய்ப் பக்கத்திருந்த சேரவரசர் வடநாட்டில் தம் வீரப்புகழ் பரப்பி னர் என்று கூறும் இலக்கியப் பிரமாணங்களை மட்டும் கற் பனையாகக் கருதுவதென்னோ?[2] பிற்காலத்துத் தமிழ்வேந்த ருள் முதலாம் இராஜேந்திரசோழன் கங்கையும் கடாரமும் (பர்மா) வென்று கொண்டானென்ற சரிதம் நம்மவரால் முற்

றும் நம்பப்பட்டு வருகின்றது ; ஆயின், பழைய சேரனொரு


  1. * பதிற்றுப். 43:
  2. t: It is curious that a Karnataka dynasty was set up even in distant Nepal, apparently in 1097, tvhich was presumably of Ganga origin. The founder, Nanya Deva (perhaps? Nanniya Deva), came from the South. He was Succeeded by Ganga Deva and four others, the last of whom removed the capital to Khatmanda, where the line came to an end. - Ins. from Nepal, by Dr. G. Buhlery-- (Lewis Rices Mysore and Coorg from the Inscriptions p. 48.)