பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

சேரன் செங்குட்டுவன்


முந்துகின்ற இயல்புடையவனாயிருந்தனன். இவ்விஷயம் சோழபாண்டியரிடம் இவன் கோபங்கொள்ள நேர்ந்தபோது, மாடலமறையோன் கூறிய சாந்த வசனங்களை விரைந்தேற் றுக் கோபமடங்கியதும், தன்னால் வென்று சிறைபிடிக்கப் பட்ட கனக விசயரைச் சிறை நீக்கியதோடு, அவர்களைச் சிறைப்படுத்திய வில்லவன்கோதை என்ற படைத்தலைவ னைக்கொண்டே அன்னோரை உபசரிக்க ஏவியதும், பின்னர் அவ்வந்தணன் கூறிய தர்மமார்க்கங்களையே அநுஷ்டித்தது மாகிய வரலாறுகளால் விளங்கும். அந்தணர் நூற்கும் அறத் திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல் என்றபடி நம் வேந்தன் பிராமண தர்மங்களைத் தன்னாட்டில் மட்டுமன் றித் தான் சென்றவிடங்களிலும் ஆதரித்துக் காத்துவந்த வன்.[1] * இக்காலைச் சேரவரசர்க்கும் இஃது இயல்பேயன்றோ ?

இனி, நம் சேரர் பெருந்தகை, குட்டுவன் எனத் தனித்தும் வழங்கப்படுவான். இதனால், இவனுக்குரிய அடை சொல் இவனது நிறம்பற்றி வழங்கப்பட்டதென்பது பெறப்படும். இவன் சிறிய தந்தைக்கும் குட்டுவன் என்பது பெயராயினும் 'பல்யானைச் செல்கெழு' என்பது அவனுக்கு விசேடணமா கும். [குட்டுவன் - குட்டநாட்டுக்குரியோன்.) இங்ஙனம் செங்குட்டுவன் என்றதற்கேற்பப் பிறரெல்லாம் கண்டு மகி ழும் கட்டழகும் உடையனாகவிருந்தான்.[2] இவற்றுடன் பல மும் பருமனும் கொண்டவனாகவும் காணப்படுகின்றான். கங் கைக்கரைப்பாடியில் மாடலனுக்குச் செங்குட்டுவன் தன் நிறையளவு பொன்னை நிறுத்துத் தானஞ்செய்தானென் பதை எழுதுமிடத்தில் இளங்கோவடிகள்,

0.


  1. * சிலப். 26. 247-5
  2. ஷை. 26: 61, 247; + 26: 73.