பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

சேரன் செங்குட்டுவன்


வளங்களை அழித்துப்போந்த செய்தி குறிக்கப்படுதல் காண லாம். இவ்வாறு, கங்காப்பிரவாகத்தால் பாடலீபுரம் தன் வளங்களையிழந்து வறுமையுற்ற விசேடம் எக்காலத்து நிகழ்ந்தது? என்பதை இனி நோக்குவோம்.


பாடலீபுரமானது, நந்தர் மெளரியர் ஆந்திரர் முதலிய பிரபல சக்கரவர்த்திகளது ஆட்சித்தலமாய், இப்பரதகண்டத் துக்கே ஒரு சிரோரத்தினம் போல் மிகுந்த பிரசித்தம் பெற்று விளங்கியதாகும். இதன் வரலாறு, தக்க சாஸனங்கள் மூல மாகப் பல நூற்றாண்டுகள் வரை தெரியக்கூடிய நிலையில் உள்ளது.[1] * மெளரியவரசருள் முதல்வனாகிய சந்திரகுப்த னும், அவன் பெயரன் அசோக சக்கரவர்த்தியும் வீற்றிருந்து ஆட்சிபுரிந்த அரண்மனை, கி.பி. 4-ம் நூற்றாண்டுவரை அதன் பழைய நிலைப்படியே இருந்துவந்ததென்பது, பா - ஹியான் (Fa - Hian) என்ற சீன வித்வான் அம்மஹாநகரத்தை நேரிற் கண்டு புகழ்ந்திருத்தலால் தெளிவாகின்றது. இதனால், அசோகன் காலந்தொட்டு பாஹியான் வரவு நிகழ்ந்த 4-ம் நூற் றாண்டிறுதிவரை எவ்வகைச் சிதைவுமின்றித் தன் பழைய நிலையில் அந்நகரம் இருந்துவந்ததென்பது நன்கு விளங்கும்

இனி, அந்நகரம், மேற்குறித்தபடி, இன்ன காலத்தில்

அழிவுற்றது என்பதை விளக்கற்கு நேரான பிரமாணம் இப்


  1. * பழைய பாடலீபுரமானது, சோணை நதியின் (Sol) வடகரை விலும், கங்கைக்குச் சிறிது தூரத்தும் அமைந்திருந்ததென்றும், 9- மைல் நீளமும் 14 - மைல் அகலமும் உடையதென்றும், 64 - வாயில்களும், 574 கோபுரங்களும், சோணைநதியின் ஜலத்தால் நிரம்பிய அகழும் உடைத் தாயிருந்ததென்றும் பூர்வீகர்பலர் எழுதிய குறிப்புக்களால் தெரிகின் றன. (V. A. Smith's Early History of India. p. 119 - 20.)