பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காலவாராய்ச்சி.

169


தென்பதாம். *[1] தத்தரவர்களும் இவ்வபிப்பிராயப்படுதல், முன் குறித்த அவர் குறிப்பைக் கொண்டு அறியத்தக்கது. இவற் றால், பாடலியழிவைப் பாடிய மாமூலனாரும் அவர் காலத்து விளங்கிய செங்குட்டுவனும் ஏறக்குறைய அவ்வைந்தாம் நாற்றாண்டில் இருந்தவராதல் பெறப்படுகின்றது.

இனி, சேரன் செங்குட்டுவன் மாமூலனார் இவர்கட்கு, பாஹியான், ஹ்யூந்- த்ஸாங்- இருவர்க்கும் இடைப்பட்ட 6, 7-ம் நூற்றாண்டுகளையே, பாடலியழிவைக்கொண்டு, கூறுதல்கூடாதோ என்று ஒரு கேள்வி இங்குநிகழ்தல் கூடியதே. அவ்வாறு கொள்வதற்கு, ஒரு முக்கியமான காரணந்தடையா கின்றது. அஃதாவது, 6 அல்லது 7-ஆம் நாற்றாண்டே சங் கத்தரசர் புலவர்க்கு உரியதாயின், அது, பல்லவ சக்கரவர்த் திகளது ஆதிக்கம் தென்னாட்டில் நிகழ்ந்த ஒரு காலவிசேட மாகும் ; ஆம்போது, தமிழ்ச் சிற்றரசர் பேரரசர்க்குள்ளும், அந்நியவரசர்க்குள்ளும் நிகழ்ந்த எத்தனையோ போர்களைக் குறித்துவரும் அகநானூறு புறநானூறு முதலிய பண்டை நூல்கள், பெருவலிபடைத்தவரும், யுத்தப்பிரியரும், தமிழ் நாடுமுழுதும் தம்மடிப்படுத்து ஆண்டுவந்தவருமான பல் லவரது பெயரையேனும், அவர் வரலாறுகளுள் ஒன்றையே னும் சிறிதுங்கூறாமலே செல்வதற்குத் தக்க காரணம் வேண்டு மன்றோ? நம் நாட்டிற் காணப்பட்டுள்ள பல்லவசாஸனங்களி லாயினும், சங்ககாலத்தரசர் செய்தி அறியப்படுவதுண்டா ? அதுவுமில்லை. அதனால், பல்லவர்கள் தென்னாட்டில் தங்கள்


  1. சமுத்திரகுப்தனுக்குப் பிந்திய அரசர், பாடலீபுரத்தைத் தங் கள் ராஜஸ்தலமாக்காது நெகிழவிட்டதாகத் தெரிதலாலும், அந்நகரம் அக்காலத்தே நிலைமாறிய செய்தி ஊகிக்கப்படுகிறது. (V.A. Smith's Early History of India. p. 278.)