பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

சேரன் செங்குட்டுவன்


என்னெனின், சமுத்திரகுப்தனும் அவன் தந்தையும், ஆந்திரர் மகதநாட்டிற் றம்பழையநிலை தவறியபின், அவர் ஸ்தானத்திற் றோன்றியவராதலால், போர்வலிமைபெற்ற அவ் வாந்திரரை இவ் வம்பமோரியர்' தம் படையாளரிற் சிறந்தவ ராகக்கொண்டிருத்தல் கூடியதேயாம். வெல்லப்பட்ட குடி களை இங்ஙனமமர்த்திக் கொள்ளுதல், இக்காலத்தரசர்க்கும் இயல்பேயன்றோ? இக்குப்தர் வருகையன்றி, பிற்காலத்துக் கொங்கண - மெளரியரைப் பற்றியதே மாமூலனார் விஷய மாயின், சேரநாட்டையடுத்துப் பிரபலமற்றிருந்த சிற்றரச ரும், சாளுக்கியரால்*[1] அடக்கப்பட்டவருமான அன்னோரை 'வடுகர் முன்னுற மோரியர், தென்றிசை மாதிர முன்னிய வரவிற்கு' என்றிங்ஙனம் திக்குவிசயப் பெருமைக்கேற்ற சொற்களாற் சிறப்பியார் என்க. தென்றிசை மாதிர முன் னிய வரவு" என்பதனால், அங்ஙனம் வந்த மோரியர், தென் னாட்டையடுத்த கொங்கணத்தவரன்றி, வடவாரியரே என்ப தும் பெறப்படுதல் காணலாம்.

இனிப் பாண்டியன் சேனாபதியான பழையன்மாறனுக் கும் மோரியர்க்கும் நிகழ்ந்ததாக மாமூலனார் கூறிய பொதி யப்போர், சமுத்திரகுப்தனது தென்னாட்டுப் படையெழுச் சியில் அவன் பாண்டிநாட்டைத் தாக்கிய செய்தியைக் குறிக் கின்றது. முற்கூறியபடி, மாந்தரனை இக்குப்தவாசன் வென்

றவனாதலின், அங்ஙனஞ் சேரனை அடக்கியவன் பாண்டி நாட்டையும் வெல்லக்கருதினன் போலும். இக்குப்தனால் வெல்லப்


  1. * கீர்த்திவர்மன் என்ற சாளுக்கிய வேந்தன் இம்மெளரியரை வென்று தன்கீழ்க்கொண்டான் என்பர். (Mysore and Coorg from the Inscriptions. p. 62).