பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

சேரன் செங்குட்டுவன்


மொழிபெயர்ப்பாகவே அத்தொடரமைந்ததாயினும், அஃது ஆந்திரவரசரின் குலப் பொதுப் பெயராதலால், 5-ம் நூற் றாண்டினனான செங்குட்டுவன் காலத்து ஆந்திரவரசனொருவ னுக்கு அது வழங்கியிருத்தலுங்கூடும்; அதனால், 2- அல் லது 3-ம் நூற்றாண்டுச் சாதகர்ணியே நம் சேரன் காலத்தவனா தல் வேண்டும் என்னும் நியதியில்லை என்க,

சாஸ்ன பரிசோதகரும் வேறு அறிஞர்சிலரும், கடைச் சங்கத்துக்கு எட்டாம் நூற்றாண்டையே ஏற்புடைய காலமாக்கி யெழுதுவர். இங்ஙனமாயின், அஃது, அப்பர் சம்பந்தர் முதலிய நாயன்மார்களையொட்டிய காலமாதல் வேண்டும். இந்நாயன்மார் அக்காலத்தவரென்பது, சாஸ்ன பண்டிதருட்படச் சரித்திரவறிஞர் பலராலும் முன்னரே துணியப்பட்டதொன்றாம். திருமாலடியாராகிய ஆழ்வார்களிற் சிலரும் இக்காலத்தவரே யாவர், இவ்வடியார்களுக்குரிய காலவிசேடத்தையே சங்கத்தரசர் புலவர்க்குங் கூறுவதா யின், அதன்முன் எத்தனையோ ஆக்ஷேபங்கள் எதிர்ப்படுதல் ஒருதலையாம். மேற்கூறிய நாயன்மார்க்கு நெடுங்காலத்துக்கு முன்பே கடைச்சங்கம் நடைபெற்றதென்பது, சங்ககாலத் தரசனான சோழன் - கோச்செங்கணான் பூர்வஜன்மத்திற் சிலந்தியாகப்பிறந்ததையும்[1] நக்கீரனார் சரிதப்பகுதியான 'தருமிக்குப் பொற்கிழியளித்த' வரலாற்றையும்[2] அவ்வடி யார்கள் பாடுதலால் நன்கு விளங்குவதன்றோ ? இன்னும் கி.பி. 770-ல் விளங்கிய ஜடிலவர்மன் - பராந்தகன் முன்னோராகப்

பாண்டிய ரெண்மர் சின்னமனூர் வேள்விகுடிச் சாஸனங்களிற்


  1. * தேவாரம், திருப்பாசூர்ப்பதிகம். விண்ணாகி -6. (அப்பர்)
  2. * ஷெ. திருப்புத்தூர்ப்பதிகம். புரிந்தமரர் - 3. (அப்பர்)