பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காலவாராய்ச்சி.

183


கூறப்படுகின்றனர். இம்முன்னோருள், கடைச்சங்கமிருந்த வராக முன்னூல்களுட்கண்ட பிரபல பாண்டியர் பலருள் ஒருவரேனும் காணப்பட்டினர். இதனாலும் 8-ம் நூற்றாண்டுக் குப் பல தலைமுறைகள் முற்பட்டவர் சங்ககாலத்தரசர்கள் என்பது வெளிப்படையன்றோ? இன்னும் இதனை விரிப்பிற் பெருகும்; சுருங்கவுரைக்குமிடத்து, இலக்கியப்பிரமாணங்க ளும் சாஸனவாதரவுகளும் அக்கொள்கைக்கு முற்றும் மாறா னவையென்றே சொல்லலாம்.

இனி, செங்குட்டுவன் காலத்தவனாகச் சிலப்பதிகாரங் குறிக்கும் 'இலங்கைக்கயவாகு ' என்ற அரசன் பெயர், மகா வமிசத்துள் 2-ம் நூற்றாண்டிலிருந்த ஒருவனுக்குக் காணப் படுகிறது; ஆயினும், அக்கஜபாகுவே நம் சேரன் காலத்தவன் என்பதற்குப் பெயரொற்றுமை ஒன்றைத்தவிர, உட்பிரமாண மொன்றும்*[1] அந்நூலாற் பெறப்படவில்லை என்பது சரித்திர அறிஞர் நன்கறிவர். இங்ஙனம் பெயரொப்பொன்றையே பற்றி ஒரு முடிவுபடுத்தல் எங்ஙனம் இயலும். இதனால், மேற்கூறிய எங்கொள்கைக்கமைந்த பிரமாணபலங்களை நோ க்குமிடத்து, அக்கயவாகு பற்றிய கொள்கை உறுதிபெற்ற தாகக் கருதக்கூடவில்லை. கயவாகு என்ற பெயர், 5-ம் நூற்

றாண்டின் முற்பகுதியுள் இலங்கையாண்ட ஒருவனுக்கு


  1. * மகாவமிசமானது, கி.மு. 501 முதல் கி.பி. 301 வரை இருந்த இலங்கையரசர் வரலாறுகளையே கூறுவதாதலால், 5-ம் நூற் றாண்டினளுகிய நம் சேரன்காலத்திருந்த இலங்கை வேந்தன் செய்தி யை அந்நூலிற் காண்டல் இயலாதரம். கி.பி. 301-க்குப் பிற்பட்ட இலங்கையரசர் வரலாறுகள், 1262, 1295-ம் வருஷங்களில் (ஏறக் குறைய மகாவம்சம் செய்யப்பட்டதற்கு ஆயிரமாண்டுக்குப்பின்) எழுதப்பட்டதென்பர். (Sketches of Ceylon History by Sir - P. Arunachalam. p. 29-30.