பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

சேரன் - செங்குட்டுவன்


முன்பு வழங்கிப் பின்பு மறக்கப்பட்டது போலும். இவ்வைந்தாம் சதாப்தத்தில், ததியன் (Dathiya) பிதியன் (Pithiya)முதலிய தமிழரசரறுவர் இலங்கையை வென்றவரெனப்படுகின்றனர்.* இவருள், ததியன் என்பவன், தலையாலங்கானந்தந்த நெடுஞ்செழியனால் வெல்லப்பட்டவனாக அகநானூற்றால் (39) அறியப்படும் திதியன் என்பவன் போலும்; இவ்வாறாயின், இவன் ஏறக்குறைய நம்சேரன் காலத்தவனேயாதலால், மேற்கண்ட கொள்கைக்கு இதுவும் ஓராதாரம் ஆகும். இதுவரை கூறிப்போந்தவற்றால், சேரன் செங்குட்டுவனும் அவனையொட்டியிருந்த அரசரும் புலவரும் 5-ம் நூற்றாண்டில்-அஃதாவது இற்றைக்கு 1450 - வருஷங்கட்குமுன் - விளங்கியவரென்ற கொள்கையையே, பற்பல காரணங்களும் வற்புறுத்துதல் கண்டுகொள்க.



 

  • Ibid. See - List of the "Kings of the Suluvamsa"

† இவன், பொதியின்மலையும் (அகம். 321) அறந்தை என்னும் வரும் (ஷை. 196) உடையவன் ; அன்னி என்பவனைப் போரில் அழித்தவன் (ஷை. 45, 126,145) ; அவ்வன்னிமகன் மிஞலியால் அழிவுற்றவன் (ஷை. 196, 262). இனி, ததியன் என்ற பெயரும் பழையன் மாறன் என்ற பெயரும் கி.மு. முதனூற்றாண்டில் இலங்கைவென்ற தமிழரசர் சிலருக்கும் மகாவமிசத்திற் காணப்படுகின்றன. இவர்கள், செங்குட்டுவன் காலத்திருந்த திதியன் பழையன் இவர்களுக்கு முன்னோர்களாதல்வேண்டும். இவர்களை நம் சேரனோடு ஒட்டிக் கூறுவதில் தடைகள் பலவுள.