பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

சேரன் - செங்குட்டுவன்

செங்குட்டுவன் தந்தையும் வேறுவேறாவர் என்று கருதற்குச் சிறந்த சான்றொன்றும் காணப்பட்டிலது.[1]

இந் நெடுஞ்சேரலாதனுக்குத் தம்பியாக விளங்கியவன், பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்பவன்; எனவே, செங்குட்டுவனுக்கு இவன் சிறிய தந்தை என்பது தானே விளங்கும். இச்செல்கெழு குட்டுவனை 3-ம்பத்தாற்பாடிய பாலைக் கௌதமனார் வேண்டுகோளின்படி, இவன் பத்துப் பெருவேள்விகளை நடப்பிக்க, முடிவில் அப் பார்ப்பனப்புலவரும் அவர் மனைவியுஞ் சுவர்க்கம்புக்கனர் எனப்படுகின்றது; இங்ஙனம் சுவர்க்கம் புக்க வரலாறு மலைநாட்டில் இன்றுங் கன்னபரம் பரையில் வழங்குவதென்பர்.[2] இவ்வேந்தன் வீரனும் ஞானியுமாக இருபத்தையாண்டு வீற்றிருந்தான்.[3]

இனி, இமயவரம்பனுக்கு மனைவியர் இருவராவர்; இவருள் ஒருத்தி சோழன் - மணக்கிள்ளியின் மகளாகிய நற்சோணை என்பாள். இந் நற்சோணையிடம் பிறந்த மக்களே, செங்குட்டுவனும் இளங்கோவடிகளும் ; “நெடுஞ்சேரலாதற்குச் சோழன் மணக்கிள்ளியீன்ற மகன்”[4] “சேரலாதற்குச்


  1. செங்குட்டுவனை அவன் சகோதரர் - “மாநீர் வேலிக் கடம்பறுத் திமயத்து, வானவர் மருள மலைவிற் பூட்டிய, வானவர் தோன்றல்” என்று கூறுதலாலும் (சிலப். காட்சிக். 1-3) அங்ஙனங் கடம்பறுத்த இமயவரம்பன் மகனே நம் சேரன் என்பது உணரப்படும்
  2. பதிற்றுப்பத்துப் பதிப்பில் மஹாமஹோயாத்தியாய. ஐயர வர்கள் எழுதிய நூலாசிரியர்வரலாறு பார்க்க. சிலப். 23, 63 - 4; பழமொழி. 316.
  3. 1 பதிற்றுப். 3-ம் பதிகம்.
  4. ௸. 5-ம் பதிகம்.