பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

சேரன் செங்குட்டுவன்


மாகப் புலமையைக் கௌரவித்த அரசர் முற்காலத்தே வேறெவருங் காணப்பட்டிலர்.[1] இவ்விளஞ்சேரல் பதினாறாண்டு வீற்றிருந்தவன்.

இனி, இவ்விளஞ் சோலின் முன்னோருள், மாந்தரன்[2] என்பவனும், கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரலிரும் பொறை என்பவனும் பிரசித்தர்களாகக் காணப்படுகின்றனர். இவருள் முன்னவனே 'மாந்தரம் பொறையன் கடுங்கோ' எனப் பரணராலும் பாடப்பட்டவனாதல் வேண்டும்.[3] மற்றொருவனாகிய கோப் பெருஞ்சேரலிரும்பொறையை நரி வெரூஉத்தலையார் என்ற புலவர் கண்டதும் அவர் தம் பழைய நல்லுடம்பு பெற்றனர் எனப்படுகின்றது.[4] மேற்குறித்த மாந்தரனின் வேறாக, யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரலிரும் பொறை என்பவனொருவன் புலவனும் வள்ளலும் போர்வீர னுமாக நூல்களால் அறியப்படுகின்றான். இவன் கபிலர்காலத் திற்குச் சிறிது பிற்பட்டிருந்தவன்.[5] ஐங்குறுநூறு இவனால் தொகுப்பிக்கப்பெற்ற தென்பர். இவன் மேற்குறித்த இளஞ்சேரலிரும்பொறைக்குத் தம்பி அல்லது மகன் போன்ற


  1. பெருங்குன்றூர்கிழார் இவ்வேந்தனைப் பாடியனவாகப் புறநானூற்றிற் காணப்படும் உ50, உகக-ம் பாடல்களால், அப்புலவரை நெடுங்காலங் காக்கும்படிவைத்துப் பின் ஒன்றுங்கொடாமலே இவ்வேந்தன் அனுப்ப , அதுபற்றி மனமுடைந்து சென்றனர் புலவர் என்பது தெரிகின்றது. இதனால், பெருங்குன்றூர் கிழாரது நல்வாழ்வுக்கு வேண்டியவனைத்தையும் அவரூரில் அவரறியாமலே அமைத்து வைத்துப் பின்னர் வெறுங்கையோடு அவரைவிடுத்தனன் இப்பெருஞ் சேரல் என்பது உய்த்துணரப்படுகின்றது. இச்சரிதம் போலப் பிற்காலத்து வழங்குவது சத்திழற்றப் புலவர் என்பவர் வரலாறொன்றேயாம்.
  2. ‘அறன்வாழ்த்த நற்காண்ட, விறன் மாந்தான் விறன்மருக’ எனக் காண்க. (பதிற். 90.)
  3. அகம். 142.
  4. புறம். 5.
  5. ௸ 53.