பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

சேரன் செங்குட்டுவன்

எங்ஙனமாயினும், மதாந்தரங்களில் அபிமானமும் ஆழ்ந்த ஆராய்ச்சியுமிக்கவர் இவ்வடிகள் என்பதில் ஐயமில்லை. மற்றும் இவர் அருமை பெருமைகள் இந்நூலில் உரியவிடங்களிற் கூறியுள்ளோம்.


செங்குட்டுவன் மனைவி மக்கள் முதலியோர்.

சேரன் - செங்குட்டுவனுடைய கோப்பெருந்தேவியாக விளங்கியவள் இளங்கோவேண்மாள் என்பாள். “இளங்கோவேண்மா ளுடனிருந் தருளி”[1] “வதுவை வேண்மாள் மங்கல மடந்தை”[2] எனச் சிலப்பதிகாரம் குறிப்பது காண்க. இதனால், இப்பெருந்தேவி வேளிர் குலத்தவள் என்பது பெறப்படும். இவளொருத்தியையன்றி வேறு மனைவியரைச் செங்குட்டுவன் மணந்திருந்தவனாகத் தெரியவில்லை.[3] செங்குட்வனுக்குக் குட்டுவஞ்சேரல்[4] என்னும் பெயர் பூண்ட மகனொருவனிருந்தனன். பரணரென்னும் புலவர் பெருமான் ஐந்தாம்


  1. சிலப்பதிகாரம். 25:5
  2. ௸. 28: 51.
  3. இளங்கோ வேண்மாள் என்ற பெயரால் இவளை இளையமனைவியாகக் கருதக்கூடுமேனும், செங்குட்டுவற்கு மூத்தமனைவியொருத்தி இருந்ததாக இளங்கோவடிகள் உரியவிடங்களிலும் உணர்த்தாமையால், அவ்வாறு துணியக்கூடவில்லை. ஒருகால் மூத்தவளிருந்து இறந்தனளாக, அடுத்து மணம்புரியப்பெற்ற இவள் இங்ஙனம் வழங்கப்பெற்றாள் போலும்.
  4. குட்டுவஞ்சேரல்-(செங்குட்டுவனுக்கு மகனாகிய சேரல் எனப் பொருள்படும்.