பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போர்ச்செயல்கள்.

33

காவன்மரமாகிய வேம்பினைத் துண்டந்துண்டங்களாகத் தறிப்பித்து, அப்பழையன் யானைகளையே கடாவாகவும், அவன் மகளிரது கூந்தலை அறுத்துத்திரித்து அதனையே கயிறாகவுங் கொண்டு வண்டியிலிழுப்பித்தனன் எனக் கூறப்பட்டுள்ளது.[1] இப்போரைப்பற்றி, இளங்கோவடிகளும்,

“பழையன் காக்குங் குழைபயி னெடுங்கோட்டு
வேம்புமுதல் தடிந்த ஏந்துவாள் வலத்துப்

போந்தைக் கண்ணிப் பொறைய.” (சிலப். 27. 124-26.)

என்று கூறினார்.

(5) இனி, கடற்கரையிலுள்ள வியலூரை ஒரு போரிற் செங்குட்டுவன் எறிந்தனனென்றும், இதனையடுத்து நேரிவாயிலிற் சோழமன்னரொன்பதின்மரை அழித்ததோடு, இடும்பாதவனத்தும்[2] வெற்றிபெற்றனனென்றும் சிலப்பதிகாரங் குறிக்கின்றது.

“சிறுகுர னெய்தல் வியலூ ரெறிந்தபின்
ஆர்புனை தெரிய லொன்பது மன்னரை
நேரிவாயில் நிலைச்செரு வென்று
நெடுந்தேர்த் தானையொ டிடும்பிற் புறத்திறுத்துக்

கொடும்போர் கடந்து.” (சிலப். 28: 115-19.)

இவற்றுள் ஒன்பது மன்னரென்றது, சோழர்குடியிற் பிறந்த இளங்கோவேந்தர் ஒன்பதின்மரை. செங்குட்டுவனுக்கு அம்மானாகிய சோழன் இறந்ததும், அவன் மகனும் தன் மைத்துனனுமாகிய இளஞ்சோழன் பட்டத்தை அடைந்தகாலத்தே, அதுபொறாமல் பெருங்கலகம் விளைத்துச் சோணாட்டை


  1. பதிற்றுப்பத்து. 44.
  2. இது, சோழநாட்டில் திருத்துறைப்பூண்டியை அடுத்துள்ளதும், தேவாரப்பாடல் பெற்றதுமான இடும்பாவனம் என்ற தலம் போலும்.