பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டு சரிதநிகழ்ச்சிகள்.

41

அவன் உயிர்பெற்றெழுந்து ‘மதிபோன்ற முகம் வாடியதே’ என்று சொல்லித் தன் கையாலே அவள் கண்ணீரைமாற்ற, கண்ணகி அவன் பாதங்களைப் பணிந்தனள். உடனே, அவன். ‘நீ இங்கிரு’ என்று சொல்லி அவ்வுடம்பை ஒழித்துவிட்டுத் தேவருலகம் புகுந்தான்.

இங்கே இவ்வாறு நிகழப், பாண்டியன் மனைவி தான் கண்ட தீச்சகுனங்களைத் தன் கணவனுடன் பேசிக்கொண்டிருக்கு நிலையிலே, கண்ணகி கோபமிக்கவளாய் அரண்மனையடைந்து, வாயில் காவலனால் தன் வரவை அரசனுக்கறி வித்து, அநுமதி பெற்று அரசன் முன் சென்று, அவன் கேட்பத் தன் ஊர் பெயர் முதலியவற்றையும், ஆராயாது கோவலனைக் கொல்வித்த அவனது கொடுங்கோன்மையையும் மிகுந்த துணிவுடன் எடுத்து மொழிந்தனள். இதனைக்கேட்ட பாண்டியன் ‘கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று—வெள்வேற் கொற்றங்காண்’ என்று கூற, கண்ணகி தன் கணவன் கள்வனல்லன் என்பதைக் காட்டும் பொருட்டுத் ‘தன் சிலம்பினுள்ளேயிருக்கும் பரல் மாணிக்கமாம்’ என்றாள். இதுகேட்ட அரசன் ‘நன்று; தேவி சிலம்பின் பால் முத்து’ என்றான். உடனே, அவற்றின் உண்மையைச் சோதிப்பதற்காகக் கோவலனிடமிருந்த சிலம்பு வருவிக்கப்பட்டது. அதனைக் கண்ணகிவாங்கித் தன்கையால் உடைக்கலானாள். உடைக்கவும் அதனுள்ளிருந்த மாணிக்கப்பரல் பாண்டியனது வாயடியிற் சென்று தெறித்தது. அதுகண்டு அரசன் பதை பதைத்து—“இழிந்த பொற்கொல்லன் சொல்லைக் கேட்ட கொடுங்கோலனாகிய யானோ அரசன்; யானே கள்வன்; அந்தோ! மிகப் புகழ்படைத்த இவ்வருமந்தகுலம் என்-