பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

சேரன்–செங்குட்டுவன்

னாற் பெரும்பழியடைந்ததே; என் ஆயுள் இப்போதே அழியக்கடவதாக” என்று கூறிப் புலம்பி மனமுடைந்து தானிருந்த ஆசனத்தே வீழ்ந்து உயிர்விட்டனன். தன் கணவனிறந்த செய்தியறிந்த சிலநேரத்துக்குள், அத்துக்க மாற்றாது அவன் கோப்பெருந்தேவியும் உயிர் நீங்கினள்.

இங்ஙனம், கண்ணகி, தன் கணவன் கள்வனல்லன் என்பதைப் பாண்டியன் முன் வழக்காடி மெய்ப்பித்து, முன் கொண்ட கோபஞ் சிறிதுந் தணியாளாய், ‘நான் பத்தினியாயிருப்பது உண்மையாயின் இவ்வூரை அழிப்பேன்’ என்று சபதஞ்செய்துகொண்டு அரண்மனையை விட்டுப் புறப்பட்டாள். புறப்பட்டு, மதுரையினுள்ளே பிரவேசித்துத் தன் இடக்கொங்கையைத் திருகியெடுத்து அதனை அந்நகரின்மீ தெறிய, அவள் சொல்லியவண்ணமே, அந்நகருள் தீப்பற்றிக்கொண்டு பலவிடங்களையும் எரித்தது. அதன் வெம்மையை ஆற்றாத மதுரையின் அதிதேவதையானவள் கண்ணகிமுன் வந்து நின்று, அவளை நோக்கி, ‘யான் இந்நகரின் தெய்வம் ; உனக்குச் சிலவுண்மை கூற வந்தேன்; அவற்றைக் கேட்பாயாக; இந்நகரத்தில் முன்பிருந்த பாண்டியர்களுள் ஒருவரேனுஞ் சிறிதுங் கொடுங்கோன்மை யுடையவரல்லர். இந்நெடுஞ்செழியனும் அத் தன்மையனேயாவன்; ஆயினும் இத்துன்பம் உனக்கு வந்தவரலாற்றைக் கூறுவேன் ; முன்பு நலிங்கநாட்டுச் சிங்கபுரத்தரசனாகிய வசு என்பவனும், கபிலபுரத்தரசனாகிய குமானென்பவனும் தம்முட் பகைகொண்டு ஒருவரையொருவர் வெல்லக் கருதியிருந்தனர். அப்போது சிங்கபுரத்துக் கடைவீதியிற் பண்டம் விற்றுக்கொண்டிருந்த சங்கமனென்னும் வணிகனை, அந்நகரத்தரசனிடம் தொழில்