பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

சேரன் - செங்குட்டுவன்

மனைவியை விரும்பிவந்தவனென்று கருதி, வாளால் வெட்டபட்டு வீழ்ந்தது கண்டு மனங்கலங்கிப் பின்பு கந்திற்பாவையென்னுந் தெய்வந்தேற்றத் தேறி, உதயகுமரன் றந்தையாகிய சோழனால் சந்தேகத்தின் மேற் சிறைவைக்கப்பட்டு அவன் மனைவி இராசமாதேவியின் முயற்சியாலே அச்சிறையினின்றும் விடுபட்டனள். பின் மணிமேகலை, காவிரிப்பூம் பட்டினத்தினின்று சாவகநாட்டுள்ள நாகபுரத்தையடைந்து, அதனரசனான புண்ணியராசனோடு மணிபல்லவஞ் சார்ந்து, அங்குள்ள புத்தபீடிகையை அவனுக்குக் காட்டி அதனால் அவ்வரசனது பழம்பிறப்பை அவனுக்கறிவித்தாள். அக் காலத்துக் காவிரிப்பட்டினம் கடல் கொள்ளப்பட்டதென்ற செய்தியையும், தன் தாயான மாதவியும் அறவணவடிகளும் வஞ்சி மாநகரிலிருத்தலையும் தீவதிலகையால் அறிந்து, அவ் வஞ்சி நோக்கி எழுந்தவள், முதலில், செங்குட்டுவனா லெடுப்பிக்கப்பட்ட கண்ணகி கோட்டமடைந்து தாயாகிய அப் பத்தினிக்கடவுளைத் தரிசித்துத் தன்னெதிர்காலச்செய்திகளை அக் கடவுளாலறியப்பெற்றபின், செங்குட்டுவனாளும் அந்நகரை யடைந்து, அதனுள்ளே பிரவேசித்தாள் ; பிரவேசித்தவள், அதன் வளங்களையெல்லாங் கண்டு மகிழ்ந்து, ஆங்கு வசித்த சமயவாதிகள் பலரோடும் அளவளாவி அவ்வச்சமயத் திறங்களை அறிந்து கொண்டனள். அதன்பின்பு, அந்நகரத்துள்ள பௌத்த விகாரத்தில் தவஞ் செய்துகொண்டிருந்த கோவலன் தந்தை மாசாத்துவானைக்கண்டு பணிய, அவன், அவள் தாயும் அறவணவடிகளும் காஞ்சி மாநகரஞ் சென்றிருத்தலையும் அவ்வடிகள் அவட்குத் தருமோபதேசஞ்செய்ய எண்ணியிருத்தலையுங் கூறியதோடு, அந்நாட்டில் மழையின்மையால் உயிர்கள் வாடுதலின், அமுதசுரபியுடன் அவள் அங்குச்