பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடநாட்டியாத்திரை.

57

நெற்றியில் விளங்குவிற்புலி கயல் பொறித்தநாள் - எம்போலும் முடிமன்னர் ஈங்கில்லைப்போலும்’ - என்று நகைத்திகழ்ந்தனர் எனத், தீர்த்தயாத்திரை செய்துகொண்டு இங்குவந்த இமயத்தாபதரால் அறிந்தேம்.[1] அவ் விழிமொழி நம்பாலே தங்குமாயின், அஃது எமக்குமட்டுமன்றி எம்போன்ற சோழபாண்டியராகிய தமிழ் வேந்தர்க்கும் இகழ்ச்சி விளைக்கக்கூடியதன்றோ? ஆதலின், அங்ஙனம் இகழ்ச்சி செய்த வடதிசை மன்னரது முடித்தலையில் பத்தினிக்கடவுளைச் சமைத்தற்குரிய கல்லை ஏற்றிக்கொண்டு வருவேன். அங்ஙனஞ் செய்யாது என் கைவாள் வறிதேவருமாயின், என்னொடு முரணிய பகையரசரை நடுங்கச்செய்தடக்காமல், வளந்தங்கிய என்னாட்டுக் குடிகளை வருத்துங் கொடுங்கோலனாகக் கடவேன்”— என்று அப்பேரத்தாணியிற் சினத்துடன் வஞ்சினங்கூறினன். இங்ஙனம் அரசன் கூறியதைக் கேட்ட ஆசான் (புரோகிதன்) ‘இமயவரம்ப ! வடவரசர், சோழ பாண்டியரையன்றி, நின்னை இகழ்ந்து கூறினவால்லர்; நீ இங்ஙனம் வஞ்சினங்கூறுதற்கு நின்னோடு எதிர்க்கும் மன்னரும் உளரோ? ஆதலால் கோபந்தணிக’ என்று அவன் சீற்றத்தைச் சமனஞ்செய்வானாயினன். உடனே, சோதிடம் வல்லானாகிய மௌத்திகன் எழுந்து நின்று ‘அரசே! நின் வெற்றி வாழ்வதாக; இவ்வுலகிலுள்ள பகையரசரெல்லாம் நின் அடித்தாமரைகளைச் சரணடையத்தக்க நன்முகூர்த்தம் இதுவே; நீ கருதிய வடதிசையாத்திரைக்கு இப்போதே எழுதல் சிறந்தது’ என்றான். இந் நிமித்திகன் வார்த்தை


  1. இச்செய்தி, வாழ்த்துக்காதையின் உரைப்பாட்டுமடையிற் கண்டது.