பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

சேரன் - செங்குட்டுவன்

வுஞ் சென்று இறுதியில் நீலகிரி என்ற மலையின் அடிவாரத்தமைக்கப்பட்ட பாடியையடைந்து, யானையினின்றிழிந்து, வீரரெல்லாம் ஆர்ப்பரித்தேத்தக் காவல்மிக்க தன்னிருக்கையிற்புகுந்து அமளிமிசைத்தங்கி இளைப்பாறலாயினன்.

இங்ஙனம், அரசன் இளைப்பாறிய சிறிது நேரத்துக்கெல்லாம் அந்தரசாரிகளாகிய முனிவரர் சிலர், ஆங்குவந்த வேந்தனைக் காண்போமென்று கீழேயிறங்கி அரசிருக்கையை நோக்கி ஒளிமிக்கமேனியுடன் வரவும், அவரைக்கண்டதனால் உண்டான சேனைகளின் ஆரவாரத்தாற் செங்குட்டுவன் முனிவர் வருகையை அறிந்து, அமளியினின்றெழுந்து வந்து அவரடி வணங்கி நின்றனன். நின்ற அரசனை நோக்கி அம் முனிவர்கள் “சிவபிரான் திருவருளால் வஞ்சிமாநகரில் தோன்றிய அரசே! யாங்கள் பொதியமலைக்குச் செல்கின்றோம். இமயபர்வதம்வரை செல்வது நின்கருத்தாதலால், ஆங்கு வாழும் அருமறையந்தணர்களைத் துன்பமின்றிக் காப்பது, நின் கடமையாகும்” என்று கூறிச் செங்குட்டுவனை வாழ்த்திச் சென்றனர். சென்றதும், கொங்கண நாட்டுக் கூத்தர்களும், கொடுங்கருநாடர்களும் தத்தங்குலத்திற்கேற்ற அலங்காரமுடையவராய்க் குஞ்சியில் தழைத்த மாலையணிந்து அழகுவாய்ந்த தம் மகளிருடன் வரிப்பாட்டுக்களைப் பாடிக்கொண்டும், குடகு நாட்டவர் தம் மகளிருடன் கார்காலத்தைப்பற்றிய பாடல்களைப் பாடிக்கொண்டும், தங்கள் சுற்றத்தோடு அலங்காரமாக ஓவர் என்ற சாதியார் அரசனை வாழ்த்திக்கொண்டும் சேரன்முன்னே தோன்றினர். இவர்களது ஆடல் பாடல்களையெல்லாங் கண்டு வந்து, தன் ஆஸ்தான - ஆடலாசிரியன் குறிப்பிட்ட முறைப்படியே